உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

அனுபவமற்ற அரசால் மக்களுக்கே துயரம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
32 பார்வைகள்

அனுபவமற்ற ஆட்சியாளர்களின் பலவீனமான நிர்வாகத்தால் மக்களே இன்று சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர் என்றும், எரிபொருள் விநியோகக் கட்டமைப்பில் அரசே கறுப்புச் சந்தையை உருவாக்கியுள்ளது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,
“நெருக்கடியான காலப்பகுதிகளில் அரசு மிகவும் தாமதமாகவே தீர்மானங்களை எடுக்கின்றது. அண்மைய ‘டித்வா’ புயல் தாக்கத்தின் போதும் அரசு மந்தகதியில் செயற்பட்டமையால் அதன் விளைவுகள் பாரதூரமானதாக அமைந்தன.

மத்திய கிழக்கில் மோதல் நிலைமை ஆரம்பித்த நாளிலிருந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசை நாம் வலியுறுத்தினோம். எனினும், எமது ஆலோசனைகளை ஜனாதிபதி அலட்சியப்படுத்தினார்.

ஒன்றரை மாதத்துக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக அரசு கூறியது. அவ்வாறாயின், இந்த மாதத்தில் மாத்திரம் மூன்று முறை எரிபொருள் விலையை அரசு அதிகரித்தது ஏன்? கையிருப்பில் எரிபொருள் இருக்குமாயின் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியம் என்ன?

தற்போதைய எரிபொருள் விலையேற்றத்துக்கு அமைய பேருந்து கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசின் குளறுபடியான வெளிவிவகாரக் கொள்கையினால் மத்திய கிழக்கு நாடுகள் இலங்கை மீது அதிருப்தியடைந்துள்ளன.” – என்றார்.

அரசு தனது தவறுகளைத் திருத்திக்கொண்டு, அனுபவத்துடன் செயற்பட வேண்டும் என்றும், நாட்டின் எரிபொருள் விநியோகத்தை முறையாக முகாமைத்துவம் செய்ய அரசு தவறியுள்ளது என்றும் அவர் இதன்போது கடுமையாகச் சாடினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

63 0 0