உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

எரிசக்தி பயன்பாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை: ஜனாதிபதி பணிப்புரை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
24 பார்வைகள்

நாட்டில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை எரிசக்தி பயன்பாட்டை முறையாக நிர்வகிப்பதற்கான அறிவுறுத்தல்களை பொதுமக்களுக்கு வழங்கி, எரிசக்தி பாதுகாப்பைப் பேண தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.


இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டபோது, எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான மேலதிக நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்த நிலையில் அவர் இந்த அறிவுறுத்தலை வழங்கினார்.


மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழ்நிலை காரணமாக, உலக நாடுகள் அனைத்தும் தொடர்ச்சியான எரிசக்தி விநியோகத்தைப் பேணுவதில் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.


இந்நிலையில், எரிசக்தியை சீர்மையான முறையில் பயன்படுத்துவது மூலம் நாடு எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்கஅரசு மட்டுமன்றி தனிநபர் மட்டத்திலும் அனைவரும் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


மேலும், அண்மைக் காலங்களில் அரசாங்கம் எடுத்துள்ள எரிசக்தி மேலாண்மை நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதுடன், பொதுச் சேவைகளுக்கான வழிகாட்டுதல்களையும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.
எரிசக்தி நுகர்வை திறம்பட கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகள் குறித்து உள்ளாட்சி அமைப்புகளுடன் கலந்துரையாடுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

63 0 0