உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் கோதுமை மாவின் விலைகளை அதிகரிக்காதிருக்க தீர்மானம்!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
27 பார்வைகள்

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் கோதுமை மாவின் விலைகளை எக்காரணம் கொண்டும் அதிகரிக்கமாட்டோம் என பால்மா இறக்குமதியாளர்களும் கோதுமை மா நிறுவனங்களும் இன்று (23) அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் உறுதியளித்துள்ளன.


தற்போதைய போர்ச் சூழ்நிலையால் விநியோக வலையமைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் தடையற்ற விநியோகத்தைப் பேணுதல் குறித்து கலந்துரையாடுவதற்காக, பால்மா இறக்குமதியாளர்களும் கோதுமை மா இறக்குமதி நிறுவனங்களும் வர்த்தக அமைச்சிற்கு அழைக்கப்பட்டிருந்தன.


இதன்போது, எரிபொருள் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டொலர் மதிப்பு அதிகரிப்பு ஆகியவை உற்பத்திச் செலவில் தாக்கம் ஏற்படுத்தியிருந்தாலும், இக்கட்டான சூழலில் அரசாங்கத்துடன் இணைந்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதே தமது நோக்கம் என நிறுவனங்கள் தெரிவித்தன.

மேலும், எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு தேவையான பால்மா மற்றும் கோதுமை மா கையிருப்பு இருப்பதாகவும், சித்திரை புத்தாண்டு காலம் முடியும் வரை விலை உயர்வு மேற்கொள்ளப்படமாட்டாது எனவும் அவை உறுதிப்படுத்தின.இதேவேளை, எரிபொருள் ஒதுக்கீட்டு முறையால் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து நிறுவனங்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தன.

இதற்கு பதிலளித்த அமைச்சர், உணவு விநியோகத்தில் ஈடுபடும் போக்குவரத்து சேவையாளர்கள் விசேட தரவு சேகரிப்பு திட்டத்தில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தினார்.அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் அமைச்சு அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

63 0 0