உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

தனியார் நிலத்தில் தீப்பரவல்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
35 பார்வைகள்

மலையகத்ததில் தொடரும் வறட்சியான காலநிலையால் காடுகளுக்கு தீ வைக்கும் விஷமச் செயல் அதிகரித்துள்ளது.

இதன்படி ஹட்டன் மண்டலக் கல்வி அலுவலகத்திற்குப் பின்னால் உள்ள ஒரு தனியார் நிலத்தில் தீ விபத்து ஏற்பட்டு அந்த நிலத்தின் சுமார் 10 ஏக்கர் பகுதி அழிந்துள்ளது.

இன்று (23) பிற்பகல் சுமார் 1:00 மணியளவில் ஏற்பட்ட தீ வேகமாகப் பரவிக் கொண்டிருந்த நிலையில், ஹட்டன் காவல்துறை அதிகாரிகளும், ஹட்டன் டிக்கோயா நகரசபை ஊழியர்களும் பெரும் முயற்சியின் பின்னர் தீயைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.

குறித்த சம்பவம், விசமிகள் சிலரின் திட்டமிட்ட செயலாகும். இந்த நிலத்தில் வசிக்கும் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக தீ வைப்பு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் குறித்த தீயினால் பகுதிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து மலையகத்தில் காலநிலை மாற்றம், கடுமையான வெப்பம், வறட்சி மற்றும் மனித நடவடிக்கைகளால் காட்டுத் தீ சம்பவங்கள் மற்றும் அதன் தீவிரம் கணிசமாக அதிகரித்துள்ளன.

வறண்ட தாவரங்கள் எளிதில் தீப்பற்றுவதாலும், காற்று வீசுவதாலும் தீ வேகமாக பரவி, சுற்றுச்சூழல், வனவிலங்குகள் மற்றும் மனித குடியிருப்புகளுக்குப் பெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

63 0 0