உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

தலவாக்கலை புனித பத்திரிசியார் ஆலய வருடாந்த திருவிழா; பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
30 பார்வைகள்

கண்டி மறைமாவட்டத்திற்கு உட்பட்ட தலவாக்கலை புனித பத்திரிசியார் ஆலயத்தின் 2026ஆம் ஆண்டிற்கான வருடாந்த திருவிழா, நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) மிகவும் பக்திபூர்வமாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டது.

இத்திருவிழா நிகழ்வுகள் காலை 10.00 மணிக்கு ஆரம்பமானதுடன் நிகழ்வுக்கு வருகை தந்த அருட்தந்தையர்கள் மற்றும் அருட்சகோதரிகளை, நுவரெலியா சென்கிளயர் தமிழ் மகா வித்தியாலய மாணவர்களின் பேண்ட் வாத்திய இசை முழங்க, பங்கு மக்கள் உற்சாகத்துடன் வரவேற்று ஆலயத்திற்கு அழைத்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்தந்தை எல்வின் பீட்டர் பெர்னாண்டோ அடிகளாரின் தலைமையில் இத்திருவிழா கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டமையும் சிறப்பம்சமாகும்.

“ஆண்டவர் உங்களுடன் இருக்கட்டும், அவருடைய ஒளி உங்களை வழிநடத்தட்டும்” எனும் புனித பத்திரிசியாரின் உயரிய சிந்தனைக்கு அமைவாக இத் திருப்பலி இடம்பெற்றது.

இத் திருவிழா திருப்பலியில் ஆலய பங்குத்தந்தை அருட்பணி ஜேசுதாசன் அடிகளார், உதவிப் பங்குத்தந்தை அருட்பணி ரன்ஜித லக்ஷான் அடிகளார், மறைமாவட்டத்தின் மூத்த குருவான அருட்பணி பாலா ராஜேந்திரம் அடிகளார் ஆகியோருடன் அருட்சகோதரிகள் மற்றும் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த பெருந்திரளான இறைமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

விழாவின் நிறைவில் அனைவருக்கும் திருவிழா நல்வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டதுடன், விசேட ஆசீர்வாத நிகழ்வுகளும் இடம்பெற்றதைத் தொடர்ந்து கலந்து கொண்ட அனைத்து மக்களுக்கும் மதிய உணவுகள் பங்கு மக்களின் ஏற்பாட்டில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இரணைமடு குளத்தின் நீர்மட்டம் குறைவு!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக…

66 0 0
இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதிக விலைக்கு குடிநீர்ப் போத்தலை விற்பனை செய்தவருக்கு 9.5 லட்சம் அபராதம்

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்த யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் 9 இலட்சத்து…

72 0 0
இலங்கை செய்திகள்

அழகுநிலையம் ஒன்றில் இருந்து 7 கோடி ரூபாய் மதிப்பிலான போ@தைப்பொருள் மீட்பு : தம்பதியினர் கைது!

மாத்தறை ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள அழகு நிலையம் ஒன்றில் வைத்து இன்று (27) சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன்…

75 0 0
இலங்கை செய்திகள்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனித்துவமான சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த சிறப்பு மருத்துவர் ஆர். ஞானசேகரம், அமைச்சரவையின் இந்த…

63 0 0