உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

இன்றைய ராசி பலன்கள் – 19.03.2026

ராசி பலன்கள் 7 மாதங்கள் முன்
55 பார்வைகள்

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவைப்படுகிறது. சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைத்து விட்டு வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அதிக நேரம் கைப்பேசி பார்க்கக் கூடாது. அதிக நேரம் நண்பர்களோடு பேசி நேரத்தை வீணடிக்க கூடாது. கவனம் முழுவதும் உங்கள் வேலையில் இருக்கட்டும் நல்லதே நடக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோஷத்திற்கு அளவே இருக்காது. நீங்கள் எதிர்பார்த்த நல்லது, எதிர்பார்க்காத நல்லது என்று நல்ல விஷயங்கள் நடந்து கொண்டே இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும். கணவன் மனைவி ஒற்றுமை, குடும்ப சந்தோஷம், வருமானம் என்று இந்த நாள் இனிய நாளாகவே அமையும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நிறைய நல்லது நடக்கும். புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். நீண்ட நாள் தெரிந்த உறவுகள், நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். இந்த நாள் நிறைய நல்ல அனுபவங்களை கற்றுக் கொள்வீர்கள். இறை வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். அழகான தோற்றம் வெளிப்படும் நாளும் கூட இன்று.

கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று அவ்வளவு அழகாக இந்த நாளை எடுத்துச் செல்ல போகிறீர்கள். இந்த நாள் இனிய நாளாக இருக்கப் போகிறது. உங்களுடைய பேச்சுத்திறமை வெளிப்படும். உங்களுடைய வசீகரத் தோற்றம் வெளிப்படும். பல பேருக்கு நீங்கள் பிடித்தவர்களாக மாறுவீர்கள். பல பேருக்கு நீங்கள் வாழ்க்கையில் முன் உதாரணமாக திகழப் போகிறீர்கள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சிக்கல்கள் இருக்கக்கூடிய நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். முன்கோபம் வேண்டாம். உயரதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். இருக்கும் வேலையை தக்கவைத்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தவோ, புதிய முதலீடு செய்யவோ முயற்சிகள் மேற்கொள்ளும் போது கவனம் இருக்கட்டும். முன்பின் தெரியாத மனிதர்களை நம்ப வேண்டாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று போட்டி பொறாமைகள் கொஞ்சம் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். சுற்றி இருப்பவர்களை நம்பாதீர்கள். உடன் இருப்பவர்களையும் நம்பாதீர்கள். உங்களுடைய மனது சொல்வதை மட்டும் கேளுங்கள். தெரியாத விஷயத்தில் காலை வைக்காதீர்கள். முன் அனுபவம் இல்லாத வேலையை செய்ய வேண்டாம். கவனத்தோடு செயல்படுங்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாள். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் தடைப்பட்டு வந்திருந்த சுப காரிய பேச்சுக்கள் மீண்டும் தொடங்கும். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். வருமானம் பெருகும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். மன நிம்மதி கிடைக்கும். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மனதில் சந்தோஷம் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பாராட்டும் புகழும் கிடைக்கும். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் போடக் கூட வாய்ப்புகள் வந்து சேரும். நல்லதே நடக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு இருப்பீர்கள். திறமையோடு செயல்படுவீர்கள். பல பேரினால் செய்ய முடியாத வேலையை போன போக்கில் சுலபமாக செய்து முடிப்பீர்கள். நிறைய பாராட்டுகளும் கிடைக்கும். உங்களுடைய பேச்சு திறமை அதிகரிக்கும். வசீகரத் தோற்றம் வெளிப்படும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும் இந்த நாள் இனிய நாளாக அமையும்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை சின்ன மனக் கவலை இருக்கும். சிந்தனை இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனம் செலுத்த முடியாது. உடல் சோர்வு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மனதிற்குப் பிடித்த பாடலை கேளுங்கள். இறை வழிபாடு செய்யுங்கள். இந்த நாளை கவனத்தோடு கடந்து செல்லுங்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். தேவையற்ற பிரச்சினைகள் உங்களை விட்டு விலகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை மேற்கொள்ளலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். நீங்கள் அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கும் நல்ல வாய்ப்புகள் வரும்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று மனதில் பட்ட விஷயத்தை அப்படியே வெளியில் பேசக்கூடாது. உங்களுடைய பேச்சுக்கும் செயலுக்கும் நிறைய எதிர்ப்புகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சிந்தித்து செயல்படுங்கள். சிந்தித்துப் பேசுங்கள். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை அதிகம் பேசாமல் மௌனமாக இருப்பது இந்த நாளை இனிமையாக்கி கொடுக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 06.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுறுசுறுப்பு தேவை. சோம்பேறித்தனத்தை விட்டு விடுங்கள். கடமையில் கவனமாக செயல்படுங்கள். இன்று முருகர் வழிபாடு செய்து, பிறகு முக்கியமான வேலைகளை செய்ய…

63 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வேலையில் முழு கவனத்தோடு செயல்பட வேண்டும். சின்னச் சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ள கூடிய மனப்பக்குவம் தேவை. தோல்விகளை கண்டு துவண்டு…

58 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 03.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். மனம் கவலையாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழுசாக கவனம் செலுத்த முடியாத சூழ்நிலை இருக்கும். இதனால்…

86 0 0
ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 02.10.2026

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இலாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய முதலீடுகளுக்கு முயற்சி செய்யலாம். வேலையில் எதிர்பார்த்ததை விட முன்னேற்றம் கொஞ்சம் குறைவாக…

98 0 0