உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மிக வேகமாக புனரமைக்கப்படும் மலையக புகையிரத பாதைகள்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
69 பார்வைகள்

மலையகப் புகையிரத மார்க்கத்தில் கண்டி முதல் பதுளை வரையிலான புகையிரத பாதைகளைப் புனரமைக்கும் பணிகள் புகையிரத ஊழியர்களால் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக மலையக புகையிரத மார்க்கத்தின் பல இடங்களில் மண்சரிவு மற்றும் தண்டவாளங்கள் தாழிறக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன.

இதனால் கடந்த சில மாதங்களாக இப்பகுதியிலான புகையிரதப் போக்குவரத்துப் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.

கண்டியின் நுழைவாயில் பகுதியில் உள்ள ‘யக்கா’ இரும்புப் பாலம் முதல் உலப்பனை வரையிலான தண்டவாளத் தாழிறக்கங்கள் சீர்செய்யப்படுகின்றன.

நாவலப்பிட்டி – ஹட்டன் பகுதிகளில் சரிந்து விழுந்த மண் திட்டுகள் அகற்றப்பட்டு வீதிகள் சுத்திகரிக்கப்படுகின்றன.

ஹட்டன் முதல் கொட்டகலை, தலவாக்கலை, வட்டகொட, கிரேட் வெஸ்டர்ன், உடரதல்ல, நானுஓயா மற்றும் பெரகும்புர வரையிலான பகுதிகளில் சேதமடைந்த பாதைகள் வெகுவாகச் செப்பனிடப்பட்டுள்ளன.

புனரமைப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின்னரே மலையக மார்க்கத்திற்கான புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என நாவலப்பிட்டி புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

72 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

58 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

75 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

70 0 0