உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னார் மறைமாவட்ட ஆயரை நேரில் சந்தித்த சிறீதரன் எம்.பி.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
46 பார்வைகள்

மன்னார் மாவட்டத்துக்கு விஜயம் செய்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மன்னார் மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய பேரருட் கலாநிதி ஞானப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளை ஆண்டகையை நேற்று (14) சந்தித்துக் கலந்துரையாடினார்.

மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் சமகால சவால்கள் தொடர்பாக ஆயரின் கவனத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கொண்டு சென்றார்.

இந்தச் சந்திப்பின்போது தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனும் உடனிருந்தார்.

சமகால அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில் தமிழ் மக்களின் நலன் சார்ந்த அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும் இதன்போது ஆலோசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.!

இஸ்லாம் மார்க்கத்தை அவமித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும்…

75 0 0
இலங்கை செய்திகள்

வர்த்தக நிலையத்தில் தீ விபத்து.!

பொகவந்தலாவ நகரில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று 5 ஆம் திகதி நள்ளிரவு 11.50 இடம்பெற்றுள்ளது என பொகவந்தலாவ பொலிஸ்…

66 0 0
இலங்கை செய்திகள்

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு.!

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு வக்பு சபையினால் நியமிக்கப்பட்ட 11 பேர் கொண்ட விசேட நிர்வாக சபையின் முக்கிய பதவிகளுக்கான தெரிவுகள் நேற்று திங்கட்கிழமை (05) முறைப்படி…

68 0 0
இலங்கை செய்திகள்

கிரிஷ் வழக்கு; நாமல் ராஜபக்ஷ, ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு.!

கிரிஷ் பணப்பரிவர்த்தனை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் குறித்த நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான ஜானகி…

67 0 0