உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மாகாண மட்ட, தேசிய மட்ட போட்டிகளில் சாதனை படைத்த மடு கல்வி வலய மாணவர்கள் கௌரவிப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
68 பார்வைகள்

வடக்கு மாகாணத்தில் கடந்த வருடம் இடம்பெற்ற மாகாண மட்டம் மற்றும் தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மடு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களை கௌரவிக்கும் விளையாட்டு வர்ணங்கள் (Sports Colours Day) நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (10) காலை மடு வலயத்தில் மடு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி ஏ. சி. வொலன்ரைன் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி கலாச்சார விவகாரங்கள் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் எம். பற்றிக் டிராஞ்சன் கலந்து சிறப்பித்தார்.

மேலும் கௌரவ விருந்தினராக மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் கே. செல்வன் சிறப்பு விருந்தினராக அந்தனி கேப்ரியல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வில் விருந்தினர்கள் மற்றும் வெற்றி பெற்ற மாணவர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.

இதன்போது தேசிய ரீதியில் சாதனை படைத்த இரண்டு மாணவர்களும், மாகாண மட்டத்தில் வெற்றி பெற்ற 102 மாணவர்களும், செயல்பட்டு மகிழ்வோம் நிகழ்வில் வெற்றி பெற்ற 72 மாணவர்களும் விசேட தேவைகளுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு இடம்பெற்ற நிகழ்வில் வெற்றி பெற்ற 6 மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

சாதனையாளர்கள் விருந்தினர்களினால் பதக்கம் அணிவிக்கப்பட்டு, பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதன் போது மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.!

இஸ்லாம் மார்க்கத்தை அவமித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும்…

75 0 0
இலங்கை செய்திகள்

வர்த்தக நிலையத்தில் தீ விபத்து.!

பொகவந்தலாவ நகரில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று 5 ஆம் திகதி நள்ளிரவு 11.50 இடம்பெற்றுள்ளது என பொகவந்தலாவ பொலிஸ்…

66 0 0
இலங்கை செய்திகள்

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு.!

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு வக்பு சபையினால் நியமிக்கப்பட்ட 11 பேர் கொண்ட விசேட நிர்வாக சபையின் முக்கிய பதவிகளுக்கான தெரிவுகள் நேற்று திங்கட்கிழமை (05) முறைப்படி…

68 0 0
இலங்கை செய்திகள்

கிரிஷ் வழக்கு; நாமல் ராஜபக்ஷ, ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு.!

கிரிஷ் பணப்பரிவர்த்தனை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் குறித்த நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான ஜானகி…

67 0 0