சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு யாழில் பெண் உத்தியோகத்தர்கள் கௌரவிப்பு.!
வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர்களின் சேவையை பாராட்டி அவர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வானது இன்றையதினம் யாழ்ப்பாணம் பொது நுலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது.
இதன்போது வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச செயலகங்களில் பணியாற்றும் பெண் உத்தியோகத்தர்களுக்கு விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.


