உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னாரில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
65 பார்வைகள்

பெண்களின் வலிமை, துணிவு மற்றும் சாதனைகளை கொண்டாடுவோம் எனும் கருப்பொருளில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (8) மாலை மன்னாரில் இடம்பெற்றது.

மன்னார் நகர சிறுவர் பூங்கா அரங்கில் மன்னார் குடிசார் அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட பகுதி பெண்கள் அமைப்புகள் கூட்டாக இணைந்து சர்வதேச மகளிர் தின நிகழ்வை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் பிரதேச செயலாளர் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வில் சாதனைப் பெண்கள் மற்றும் பெண்களோடு தோல் நின்று உழைக்கும் ஆண்களுக்கும் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதையடுத்து கிறீன் பீஸ் சவுத் ஏசியா (GREENPEACE SOUTH ASIA ) அமைப்பின் அனுசரனையுடன் மன்னார் பிரதான நூலக சுவரில் பெண்களால் வரையப்பட்ட பிரம்மாண்டமான சுவரோவியம் காட்சிப்படுத்தலுக்காக வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. காலநிலை நீதிக்கான பெண்கள் எனும் தொனிப்பொருளில் குறித்த ஓவியம் பெண்களினால் வரையப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

மன்னார் பொது நூலகத்தின் வெளிப்புறச் சுவரில் உருவாக்கப்பட்டுள்ள புதிய சமூக சுவரோவியம், கலை, அறிவியல் மற்றும் சமூகத்தின் குரல்களை ஒன்றிணைத்து, இந்தத் தீவின் வளமான உயிரியல் பல் வகைமையையும் காலநிலை பேரிடர்களுக்கு எதிராக பெண்கள் காட்டும் தலைமையையும் வெளிச்சமிட்டு காட்டுகின்றமை சிறப்பம்சமாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் இளம் பெண்ணைக் கொ**லை செய்துவிட்டு இளைஞன் உயிர்மாய்ப்பு.!

யாழ்ப்பாணம், கோவில் வீதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர், இளம் பெண் ஒருவரைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை…

49 0 0
இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

73 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

59 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

77 0 0