உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது களஞ்சியப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் அழிப்பு.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
78 பார்வைகள்

மன்னார் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த வாரம் பொதுமக்களால் கிடைக்கபெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் போது உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையம் ஒன்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மன்னார் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நகரசபை சுகாதார பரிசோதகர் இணைந்து மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது காலாவதியான உணவுப் பொருட்களை காட்சிப்படுத்தியமை, அழுகிய மரக்கறி, பழங்கள் காட்சிப்படுத்தியிருந்தமை, உணவுப் பொருட்களை உரிய வகையில் களஞ்சியப்படுத்தாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பிரபல வர்த்தக நிலையம் ஒன்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வர்த்தக நிலையத்தின் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் வர்த்தக நிலையத்திற்கு ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் கைப்பற்றப்பட்ட உணவுப் பொருட்களையும் உடனடியாக அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் மன்னார் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நகரசபை சுகாதார பரிசோதகர் மற்றும் நகரசபை ஊழியர்கள் இணைந்து குறித்த உணவுப் பொருட்களை மீண்டும் எந்த ஒரு தேவைக்கும் பயன்படுத்த முடியாத வகையில் அழித்தனர்.

மேற்படி 13 இலட்சம் ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன் மன்னார் சுகாதாரத்துறை தொடர்ச்சியாக இவ்வாறான நடைமுறைகளை மேற்கொண்டதுடன் தொடர்ச்சியாக உணவகங்களின் சுகாதாரம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.!

இஸ்லாம் மார்க்கத்தை அவமித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும்…

75 0 0
இலங்கை செய்திகள்

வர்த்தக நிலையத்தில் தீ விபத்து.!

பொகவந்தலாவ நகரில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று 5 ஆம் திகதி நள்ளிரவு 11.50 இடம்பெற்றுள்ளது என பொகவந்தலாவ பொலிஸ்…

66 0 0
இலங்கை செய்திகள்

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு.!

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு வக்பு சபையினால் நியமிக்கப்பட்ட 11 பேர் கொண்ட விசேட நிர்வாக சபையின் முக்கிய பதவிகளுக்கான தெரிவுகள் நேற்று திங்கட்கிழமை (05) முறைப்படி…

68 0 0
இலங்கை செய்திகள்

கிரிஷ் வழக்கு; நாமல் ராஜபக்ஷ, ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு.!

கிரிஷ் பணப்பரிவர்த்தனை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் குறித்த நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான ஜானகி…

67 0 0