உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வீடொன்றில் திருடப்பட்ட பெருந்தொகை நகைகள், பணத்துடன் சிக்கிய பெண்கள்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
81 பார்வைகள்

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் 50 வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த புதன்கிழமை (04) இரவு இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான பெண் ஒருவர் உள்ளடங்களாக நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் பெருந்தொகை பணம் ஆகியவற்றையும் மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
மன்னார் சாந்திபுரம் 50 வீட்டுத்திட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த புதன்கிழமை (04) இரவு பாரிய திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக குறித்த வீட்டின் உரிமையாளர் நேற்று வியாழக்கிழமை (5) மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதன்போது குறித்த வீட்டில் தாலிக்கொடி, சங்கிலி, காப்பு உள்ளடங்களாக 15 பவுன் தங்க நகைகளும், 4 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணமும் காணாமல் போயுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

குறித்த முறைப்பாடுகளுக்கு அமைவாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யூ.என்.கெட்டியாராச்சியின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் பத்தே விதான, பொலிஸ் சாஜன் சிவராஜா(53207), பொலிஸ் கொஸ்தாபல்களான சஞ்ஜீவராஜ்(37747), கருணாரத்ன(105221), பெண் பொலிஸ் கொஸ்தாபில்களான ரஜித்தா(10137), ஓவியா(12439) ஆகியோர் இணைந்து முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது பிரதான சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ஏனைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களிடம் இருந்து திருடப்பட்ட சுமார் 56 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 15 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் என்பன முழுமையாக மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த நான்கு பெண்களும் தற்போது மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தி வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருவதோடு விசாரணைகளின் பின்னர் மீட்கப்பட்ட நகைகள், பணம் மற்றும் கைது செய்யப்பட்ட நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த மன்னார் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.!

இஸ்லாம் மார்க்கத்தை அவமித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும்…

75 0 0
இலங்கை செய்திகள்

வர்த்தக நிலையத்தில் தீ விபத்து.!

பொகவந்தலாவ நகரில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று 5 ஆம் திகதி நள்ளிரவு 11.50 இடம்பெற்றுள்ளது என பொகவந்தலாவ பொலிஸ்…

66 0 0
இலங்கை செய்திகள்

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு.!

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு வக்பு சபையினால் நியமிக்கப்பட்ட 11 பேர் கொண்ட விசேட நிர்வாக சபையின் முக்கிய பதவிகளுக்கான தெரிவுகள் நேற்று திங்கட்கிழமை (05) முறைப்படி…

68 0 0
இலங்கை செய்திகள்

கிரிஷ் வழக்கு; நாமல் ராஜபக்ஷ, ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு.!

கிரிஷ் பணப்பரிவர்த்தனை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் குறித்த நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான ஜானகி…

67 0 0