உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

உயிர்மாய்த்த பெண்ணின் உடலுக்கு துஷ் – பிரயோகம்; குற்றவாளிகளை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

உயிர்மாய்த்த இளம் பெண்ணின் உடலுக்கு பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று (05), நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அமைதியான கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர்.

இச் சம்பவம் கடந்த 24 ஆம் திகதி டிக்கோயா – கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹட்டன் பிரதேசத்தை சேர்ந்த இளம் யுவதி ஒருவர் கடந்த மாதம் 23 ஆம் திகதி உயிரை மாய்த்த நிலையில், அவருடைய உடல் டிக்கோயா – கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.

அந்நிலையில், வைத்தியசாலையில் பணிபுரியும் மூன்று பணியாளர்களால் குறித்த பெண்ணின் உடல் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்திருந்தனர். இந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், சம்பவம் தொடர்பாக தவறிழைத்தவர்களுக்கு எதிராக வைத்தியசாலை நிர்வாகம் இதுவரை எந்தவிதமான சட்டரீதியான அல்லது ஒழுக்காற்று நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இதனை எதிர்த்து கடந்த மாதம் 3 ஆம் திகதி கிளங்கன் வைத்தியசாலை வளாகத்தில் பாரிய எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. அப்போது போராட்டக்காரர்களிடம் வைத்தியசாலை நிர்வாகம் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் கலந்து கொண்ட இளைஞர், யுவதிகள் இருபாலரும் இச் சம்பவம் பற்றி முழுமையாக விசாரணை வேண்டும் என்றும், அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும், இவ்வாறான செயலில் ஈடுபட்ட மூன்று பேரும் பணியில் இருந்து உடனடியாக இடை நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், இச் சம்பவம் இனியும் இலங்கையில் எப்பகுதியிலும் நடைபெறாத வண்ணம் இன்றைய அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

அதன்படி, ஹட்டன், மஸ்கெலியா, வட்டவளை, வெளிஓயா, பொகவந்தலாவ, டிக்கோயா, கொட்டகலை, தலவாக்கலை, அக்கரபத்தனை, நுவரெலியா, கந்தபளை, கொத்மலை மற்றும் இறம்பொடை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெருந்திரளான இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியை வழங்க வேண்டும் என்றும், குற்றத்துடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, “உயிரற்ற உடலுக்குப் கூட பாதுகாப்பில்லை என்றால், பெண்களுக்கு எங்கே பாதுகாப்பு?”,
“பெண்ணின் உடல் உயிரோடு இருந்தாலும், இறந்தாலும் மரியாதைக்குரியது!”, “மருத்துவமனை கூட பாதுகாப்பான இடமாக இல்லையா?”, “பெண்களுக்கு பாதுகாப்பு தர முடியாவிட்டால், ஆட்சி எதற்காக?” எனும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை காட்சிப்படுத்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக விரைவான மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0