உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மற்றுமொரு ஈரானிய கப்பல்; தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
60 பார்வைகள்

இலங்கை கடற்பரப்பில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மேலும் ஒரு ஈரானிய கப்பல் உள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பில் அரசாங்கத்திடம் இருந்து தெளிவான அறிக்கையொன்று அவசியம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று (05) நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய சஜித் பிரேமதாச, நேற்றைய தினம் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து டொர்பிடோ மூலம் குறித்த கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பிலும் அரசாங்கம் விசேட அறிக்கையொன்றை விடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

ஈரானிய கப்பலில் இருந்தவர்களின் உயிர்களைக் காப்பாற்றிய இலங்கை படையினருக்குப் பாராட்டுத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்தச் சம்பவம் தொடர்பில் இராஜதந்திர ரீதியாக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து இதுவரை தெளிவான அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை எனவும் தெரிவித்தார்.

நாட்டின் இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய பாரதூரமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (04) நாட்டுக்கு அருகில் இவ்வாறானதொரு கப்பல் அழிக்கப்பட்டமை தொடர்பில் அரசாங்கம் அறிந்திருந்தும் சபைக்கு அறிவிக்காமை நாடாளுமன்ற உறுப்பினர்களின் அரசியலமைப்பு ரீதியான கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தடையாக அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், தற்போது காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள ஈரானியர்களின் சடலங்களை வைப்பதற்கு வைத்தியர்களால் 40 அடி கொள்கலன் கோரப்பட்டுள்ளதாகவும், இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித், எமது நாட்டு கடற்பரப்பில் இடம்பெறும் செயற்பாடுகளை அரசாங்கம் அறியாமல் இருப்பது எவ்வாறு தேசிய பாதுகாப்பிற்குப் பிரச்சினையாக அமையாது எனவும் இதன்போது கேள்வியெழுப்பினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

72 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

58 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

76 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

70 0 0