உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பிரதம நீதியரசர் மன்னாரிற்கு விஜயம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
57 பார்வைகள்

இலங்கையின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன உத்தியோகபூர்வ பயணமாக இன்றையதினம் செவ்வாய்க்கிழமை (3) காலை மன்னாரிற்கு விஜயம் செய்தார்.

மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்ட பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன மன்னார் நீதவான் நீதி மன்றத்திற்கு விஜயம் செய்தார்.

இதன்போது மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா, மன்னார் மாவட்ட நீதவான் ஐ.என்.றிஸ்வான், மன்னார் மாவட்ட மேலதிக நீதவான் எம்.எம்.எப்.ஸிஹாரா மற்றும் சட்டத்தரணிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்கள் இணைந்து பிரதம நீதியரசரை வரவேற்றனர்.

அதனைத்தொடர்ந்து மன்னார் மேல் நீதிமன்ற கட்டிடத்தில் பிரதம நீதியரசர் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது நீதிமன்ற செயல்பாடுகள் உள்ளடங்களாக பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.!

இஸ்லாம் மார்க்கத்தை அவமித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும்…

75 0 0
இலங்கை செய்திகள்

வர்த்தக நிலையத்தில் தீ விபத்து.!

பொகவந்தலாவ நகரில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று 5 ஆம் திகதி நள்ளிரவு 11.50 இடம்பெற்றுள்ளது என பொகவந்தலாவ பொலிஸ்…

66 0 0
இலங்கை செய்திகள்

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு.!

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு வக்பு சபையினால் நியமிக்கப்பட்ட 11 பேர் கொண்ட விசேட நிர்வாக சபையின் முக்கிய பதவிகளுக்கான தெரிவுகள் நேற்று திங்கட்கிழமை (05) முறைப்படி…

68 0 0
இலங்கை செய்திகள்

கிரிஷ் வழக்கு; நாமல் ராஜபக்ஷ, ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு.!

கிரிஷ் பணப்பரிவர்த்தனை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் குறித்த நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான ஜானகி…

67 0 0