உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

வைத்தியசாலையின் பிரேத அறையில் உயிரிழந்த யுவதி மீது துஷ் – பிரயோகம்; மக்கள் போராட்டம்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
54 பார்வைகள்

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் உயிரிழந்த யுவதி ஒருவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சைகளையடுத்து அது குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென இன்று செவ்வாய்க்கிழமை (03) வைத்தியசாலை முன்றலில் பொது மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

கடந்த 23 ஆம் திகதி உயிரை மாய்த்துக்கொண்ட 23 வயது யுவதி ஒருவரின் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மறுநாள் காலை உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த நாள் சட்ட வைத்திய அதிகாரியினால் உடற்கூற்று பரிசோதனைகள் செய்யப்பட்டு அன்றைய தினம் மாலை மேற்படி யுவதியின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

எனினும் 23 ஆம் திகதி இரவு மேற்படி வைத்தியசாலை ஊழியர்கள் மூவர் பிரேத அறைக்குள் சென்று வந்தமை குறித்து ஏனைய ஊழியர்கள் வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரியிடம் முறையிட்டுள்ளனர்.

அதையடுத்து வைத்தியசாலை சி.சி.டி.வி காணொளியை பரிசோதித்த போது குறித்த ஊழியர்கள் மூவரும் பிரேத அறைக்குள் சென்று வந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பாதிக்கப்பட்ட தரப்பினரிடமிருந்து முறைப்பாடுகள் வராத காரணத்தினால் இது குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லையென கூறப்படுகின்றது.

மேலும், குறித்த ஊழியர்கள் மூவரும் மறுநாள் விடுமுறையில் சென்றுள்ளனர். இந்த விவகாரம் வைத்தியசாலை வட்டாரத்துக்கு வெளியேயும் கசிந்துள்ளது.

இதையடுத்து இது குறித்து நீதியான விசாரணைகள் நடத்தப்படல் வேண்டும் என இன்றையதினம் காலை பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

அவ்விடத்துக்கு வருகை தந்த வைத்தியசாலை பணிப்பாளர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இது குறித்த உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்றார்.

இதன் போது அங்கு கருத்து வெளியிட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர், ‘எமக்கு வைத்தியசாலை நிர்வாகத்தின் மீது நம்பிக்கையில்லை, எனவே இந்த விடயத்தை பொலிஸாருக்கு ஒப்படைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸ் விசாரணைகள் நடத்தப்படல் வேண்டும்’ என்று கோரிக்கை முன்வைத்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சஜித்தினால் ஆரம்பிக்கப்பட்டு இடையில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள் என்.பி. பி அரசால் பூர்த்தி செய்யப்படும்!

சஜித் பிரேமதாச அவரது ஜனாதிபதி கனவை நனவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத் திட்டங்களும், அவரும் ஜனாதிபதியாகவில்லை, மக்களை நிற்கதியாக்கியிருக்கின்ற வீட்டுத் திட்டங்களாக இறுதியிலே அது அமைந்திருந்தது. அந்த வீட்டுத்திட்டங்களையும்…

72 0 0
இலங்கை செய்திகள்

கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் கடும் குளிருடனான காலநிலை

மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்திலும் நுவரெலியா மாவட்டத்திலும் இன்று மதியம் முதல் கன மழையுடன் கூடிய காலநிலையும் அதிக அளவில் பனிமூட்டம் காணப்படுகிறது. பஸ்பாகே கோரலை பிரிவில்…

58 0 0
இலங்கை செய்திகள்

காங்கேசன்துறையில் சீமெந்து பொதியிடும் தொழிற்சாலை – ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக, முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும்…

76 0 0
இலங்கை செய்திகள்

பேருந்துடன் மோதுண்டு சைக்கிள் ஓட்டுநர் ப@லி! : வவுனியாவில் துயரம்!!

வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப்…

70 0 0