உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

இந்த அரசாங்கத்தினால் சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய ஒரு விசாரணையை நடத்தினால் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விடயமாக இருக்கட்டும், பொறுப்பு கூறல் விடயமாக இருக்கட்டும் நிரந்தரமான ஒரு தீர்வை அரசு வழங்கக் கூடியதாக இருக்கும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மொட்டு, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி போன்ற கட்சிகளுடன் கூட்டுக் கட்சியாக அல்லது கூட்டணியாக இலங்கைத் தமிழரசுக் கட்சி செல்லும் என்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்திற்குட்பட்ட ரமேஷ்புரம், கணபதி நகர், ஐயன்கேணி ஆகிய அறநெறி பாடசாலைகளில் கல்வி கற்கும் 6ஆம் தரத்திற்கு மேற்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

ரமேஷ்புரம் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை உறுப்பினரும் ஊடகவியலாளருமான செல்வகுமார் நிலாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று நகரசபை உறுப்பினர் ரகு உட்பட ஆலய நிர்வாக சபையினர், கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் சங்கம் மற்றும் பொதுமக்கள், பொது அமைப்புக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் கருத்துதெரிவித்த அவர்,
எங்களுடைய கட்சி அபிவிருத்திக்கு என்று இல்லாத ஒரு கட்சி அல்ல கடந்த காலங்களில் அதிகளவான அபிவிருத்திகளை இந்த மாவட்டத்தில் செய்திருக்கின்ற கட்சி எங்களுடைய கட்சி தான். 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் இந்த மாவட்டத்தில் எந்த ஒரு பிரதேசத்திலும் இலங்கை தமிழர் கட்சியோ அல்லது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரோ நிதி ஒதுக்காத எந்த ஒரு ஆலயமோ, விளையாட்டு கழகங்களோ இருக்காது நான் அறிந்த வகையில் அதுவும் கேட்டு வந்தவர்களுக்கு மாத்திரம் கேட்டு வராதவர்களுக்கு நான் ஏதும் செய்ய முடியாது.

கடந்த சில காலங்களில் 40 மில்லியன் ரூபாய் நிதியில் பல்வேறு வேலைத்திட்டங்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் தனி ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக நான் செய்தேன். அந்தவகையில் எங்களுடைய கட்சி அபிவிருத்தியையும் முன்னெடுக்கும். அதே போன்று தேவை வருகின்ற போது அதாவது வெள்ள நிவர்த்த நிவாரணங்கள், கற்றல் உபகரணங்கள் வழங்குதல் போன்ற பல விடயங்களை அதாவது இந்த மக்களின் தேவைகளை அறிந்து நாங்கள் அவற்றை நிவர்த்தி செய்து வருகின்றோம்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு என எந்த அரசாங்கம் வந்தாலும் நிதி ஒதுக்கீட்டை வழங்குவார்கள் அது முன்னைய காலத்தில் ஒரு கோடி ரூபாயாக இருந்தது. அதனை ஐம்பதாயிரம் கோயில்களுக்கு வழங்கலாம். ஒரு இலட்சம் விளையாட்டுக் கழகங்களுக்கு வழங்கலாம். ஒரு இலட்சம் பாடசாலைகளுக்கு வழங்கலாம். 50 ஆயிரத்துக்கு ஒரு வாழ்வாதார திட்டங்களை வழங்கலாம் அப்போது. ஆனால் அந்த காலத்தில் ஐம்பதாயிரம் ரூபாயை கொண்டு ஒரு ஆலயத்திற்கு ஒலிபெருக்கி சாதனங்களை கொள்வனவு செய்ய முடியும். இப்போது அவ்வாறு கொள்வனவு செய்வதாயின் இரண்டரை இலட்சம் ரூபாயை தாண்டும். இதுதான் பணவீக்கம். இருபது வருடங்களின் பின்னர். கடந்த அரசாங்கத்தில் 40 கோடி ரூபாய் நிதி எனக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த அரசாங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒரு கோடி ரூபாய் மாத்திரமே ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அதுவும் ஆக குறைந்தது 2 இலட்சம் ரூபாய் மாத்திரமே போட முடியும். 50 பேருக்கு மாத்திரமே நிதி ஒதுக்கீட்டை செய்ய முடியும்.

நாங்கள் மக்களுக்கு ஒழிவு மறைவின்றி வேலை செய்பவர்கள் ஏனென்றால் மாவட்டத்தில் அதிகளவு வாக்குகளை வழங்கி என்னை தேர்வு செய்தார்கள். நான் நீதியாக 10 தமிழ் பிரதேச செயலாளர் பிரிவுகள் இருக்கின்றது அனைத்திற்கும் 10 இலட்சம் ரூபாய் வீதம் பிரதேச வழங்கி இருக்கின்றேன்.

ஜனாதிபதியின் கட்சியை சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை நான் சந்தித்தேன் அவரிடம் கூறினேன் பாரிய பிரச்சினையாக இருக்கின்றது உங்களுடைய அரசாங்கம் இந்த ஒரு கோடி ரூபாயை 50 பேருக்கு பிரிக்கக் கூறி இருக்கின்றது என்று அவர் என்னை பார்த்து சிரித்தார் எங்களுக்கு அந்த பிரச்சினை இல்லை என்று கூறினார். நான் நினைத்தேன் ஜனாதிபதி கள்ளத்தனமாக இவர்களுக்கு மேலதிகமாக பணம் கொடுக்கின்றார்ரோ என்று அதனால் தான் இவ்வாறு சிரிக்கின்றாரோ என்று நினைத்தேன். அவ்வாறு இல்லை எங்களுக்கு அந்த ஒரு கோடி ரூபாயும் நிதி ஒதுக்கீடு இல்லை என்றார்.

நீங்களாவது உங்களுக்கு வழங்கிய ஒரு கோடி ரூபாயில் 50 நபர்களுக்கு பிரிக்கலாம் ஆனால் எங்களுக்கு அதுவும் இல்லை. ஆளுங்கட்சிக்கு இல்லையா என நான் கேட்டபோது அது வருகின்றது. அதனை நாங்கள் பிரிக்க முடியாது கட்சியே பிரிக்கும் என கூறினார். கொழும்பிலிருந்து தான் மட்டக்களப்பு மாவட்டத்திற்கோ அல்லது வேறு எந்த மாவட்டத்திற்கோ தேசிய மக்கள் சக்தியின் அபிவிருத்திக்காக நிதி பிரிக்கப்படும். அவர்கள் பரிதாபமான நிலையில் இருக்கின்றார்கள்.

எங்களுடைய தமிழ் சமூகம் ஒரு காலத்தில் ஆயுதம் ஏந்தி போராடிய ஒரு இனம். இன்று நாங்கள் கல்வியின் ஊடாக எங்களது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அரசியல் ஊடாக எங்களால் முடிந்த போராட்டங்களை நாங்கள் முன்னெடுக்கின்றோம். உங்கள் கல்வியின் ஊடாக எமது இனத்தினுடைய விடுதலை இருக்கின்றது.

உத்தியோகபூர்வமாக சேர கூறி எங்களுடைய கட்சியிடம் பேசியதாக நான் அறியவில்லை. அவ்வாறான ஒரு அழைப்புகள் வந்தால் அது கட்சியினுடைய உயர்மட்ட குழுக்கள் மத்திய செயற்குழுக்கள் தான் அந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும். இருந்த போதும் என்னுடைய அறிவுக்கு எட்டிய வகையில் மொட்டு, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி போன்ற கட்சிகளுடன் கூட்டுக் கட்சியாக அல்லது கூட்டணியாக இலங்கை தமிழரசுக் கட்சி செல்லும் என்பதற்கு எந்த வாய்ப்பும் இருக்கும் என நான் நம்பவில்லை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து ஆனால் இது தொடர்பாக கட்சியினுடைய உயர்மட்டம்தான் முடிவு எடுக்க வேண்டும்.

அரசாங்கத்தை பொறுத்தவரையில் இந்த சுரேஷ் சாலியினுடைய கைது சம்பந்தமாக உண்மையில் நான் 2023 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பல விடயங்களை வெளிப்படுத்தி இருந்தேன். சர்வதேச விசாரணை வந்தால் தான் எங்களுடைய சாட்சியங்களை ஒப்படைக்கலாம் என்று இன்றும் சுரேஷ் சாலி கைது செய்யப்பட்டிருந்தாலும் கூட இன்றும் சாட்சிகள் வழங்குவதற்கு பலர் இருக்கின்றார்கள்.

சுரேஷ் சாலியின் கைதுக்கு பின்னர் இலங்கை வரலாற்றில் நடக்காதவாறு நடந்திருக்கின்றது. அரசாங்கத்தின் இந்த நல்ல விடயங்களை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். நல்ல விடயங்களை நாங்கள் மறுப்பது அல்ல. அந்த வகையில் சுரேஷ் சாலி போன்று உயர்மட்ட இராணுவ புலனாய்வுத்துறை இராணுவ அதிகாரிகளை கைது செய்வது இந்த அரசாங்கம் செய்துள்ள பெரியதொரு விடயம். ஆனால் இன்னமும் பலர் இருக்கின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் நான் நினைக்கின்றேன் 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை அத்தோடு அதனை தொடர்ந்து இராணுவ புலனாய்வுத்துறை செய்த பல விடயங்கள் தொடர்பாக பலர் கருத்துக்கள் முன் வைத்திருக்கின்றார்கள். நாங்களும் நாடாளுமன்றத்தில் இந்த விடயங்களையும் கூறி இருக்கின்றோம்.

இந்த விடயங்கள் தொடர்பாகவும் சர்வதேச மேற்பார்வையுடன் ஒரு விசாரணையை இந்த அரசாங்கம் செய்யுமாக இருந்தால் அரசுக்கு ஒரு நிரந்தரமான வெற்றி கிடைக்கும். அது ஒரு புறம் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விடயமாக இருக்கட்டும், பொறுப்பு கூறல் விடயமாக இருக்கட்டும் நிரந்தரமான ஒரு தீர்வை அரசு வழங்கக் கூடியதாக இருக்கும் சர்வதேச அங்கீகாரத்துடன் ஒரு விசாரணையை நடத்தினால்.

அந்த வகையில் இவ்வாறான ஒரு பின்னணியில் நான் ஏன் கூறுகின்றேன் என்றால் மொட்டு கட்சியை சேர்ந்தவர்கள் சுரேஷ் சாலி இராணுவ வீரர் தமிழ் மக்களை அழித்ததில் அவருக்கும் பங்கு இருக்கின்றது என்கின்ற போது தமிழரசுக் கட்சி இவ்வாறான ஒரு கூட்டணியில் சேருமா என்ற கேள்வி கேட்பது பிழை என்பதை சொல்லுவதற்காகதான் கூறுகின்றேன்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

50 0 0
இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

62 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

33 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

53 0 0