காடுகளுக்கு தீ வைக்கும் விஷமிகள்.!
மத்திய மலைநாட்டில் உள்ள பாதுகாக்கப்பட்ட காடுகளில் விஷமிகள் தீ வைப்பது அதிகரித்து வருவதால் நீர் ஆதாரங்கள் மற்றும் வனவிலங்குகளை அழிந்து வருகிறது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் ஒரு மாதத்திற்கும் மேலாக நிலவும் கடுமையான வறண்ட வானிலை காரணமாக, நீர் மின் நிலையங்களுக்கு நீர் வழங்கும் நீர்த்தேக்கங்களுக்கு ஒதுக்கப்பட்ட காடுகள் மற்றும் மானா பற்றைகள் விஷமிகளால் தீ வைக்கப்படுகிறது.
அதன் காரணமாக பல ஏக்கர் காடுகள் அழிக்கப்படுவதால் அவை வறண்டு போகும் அபாயம் உள்ளது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இந்தப் பகுதிகளில் சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் பொழுதுபோக்கு மற்றும் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக இந்த தீ வைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
தேசிய நீர் மின் அமைப்பின் மவுசாகலை, காசல்ரீ மற்றும் மேல் கொத்மலை நீர் மின் நிலையங்களுக்கு முக்கிய நீர் ஆதாரங்களாக இருக்கும் காடுகள் மற்றும் மானா பற்றைகளை எரிப்பதால் நீர் ஆதாரங்கள் வறண்டு முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் வேகமாகக் குறைகிறது.
மவுஸ்சாகலை மற்றும் காசல்,ரீ மேல் கொத்மலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் (01) காலை நிலவரப்படி, நிரம்பி வழியும் மட்டத்திலிருந்து முறையே 10 மற்றும் 15 அடி குறைந்துள்ளதாக நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியாளர்கள் தெரிவித்தனர்.
சுற்றுச்சூழல் அமைப்புகளும், அப்பகுதி மக்களும் இதுபோன்ற செயல்களைச் செய்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு பொறுப்பானவர்கள் வலியுறுத்துகின்றனர்.
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் வெகுவாக குறைந்து வருகிறது. அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள நீர்த்தேக்க பகுதியில் உள்ள அனைத்து பற்றைகளுக்கும் விஷமிகள் தீ வைத்துள்ளனர்.


