உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மட்டக்களப்பு நகரில் போதைப்பொருள் ஒழிப்பு வாரம் ஆரம்பம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
34 பார்வைகள்

முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக நடைமுறைப்படுத்தப்படும் “போதைப்பொருள் ஒழிப்பு வாரம்” இன்று (01) நாடளாவிய ரீதியில் ஆரம்பமானது.

இன்று ஆரம்பமாகியுள்ள வாரத்தை போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்துவதற்கு, போதைப்பொருள் அனர்த்தத்தை ஒழிப்பதற்கான முழு நாடும் ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபை தீர்மானித்தன் அடிப்படையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நிகழ்வு இன்று மட்டக்களப்பு நகரில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன, பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது விற்பவருக்கும், அடிமையானவர்களுக்குமான அறிவித்தல் அகன்று செல் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட, முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டம் என்றும் 1818 அவசர தொலைபேசி இலக்கமும் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் வாகனங்களில் பொறிக்கப்பட்டதுடன் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டன.

இந்த வாரத்தின் ஊடாக போதைப்பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்தி ஒடுக்குதல், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையானவர்களை மீட்டு, அவர்களை புனர்வாழ்விற்கு உட்படுத்துதல், இதற்காகத் தேவையான மக்கள் விழிப்புணர்வு மற்றும் மேம்பட்ட சமூக உரையாடலை உருவாக்குதல் போன்ற நோக்கங்களை அடைவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கமைய, இந்த வாரத்தில் அரச நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் அடிமட்ட அளவில் விரிவான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அரசாங்க அமைச்சுகள் உட்பட அனைத்து இணைந்த நிறுவனங்களின் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் பல திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் பல்வகையான புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. அத்துடன், பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை போக்குவரத்து வாகனங்களை மையப்படுத்தி பல்வேறு பிரச்சார நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

போதைப்பொருள் அனர்த்தத்தை ஒழிப்பதற்காக சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் ஊடாக தேவையான சட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட ஏனைய தலையீடுகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படும் அதேவேளை, இந்தத் தேசிய செயற்பாட்டை வெற்றிபெறச் செய்வதற்கு அவசியமான பரந்த சமூக விழிப்புணர்வை இந்த அனைத்துத் திட்டங்கள் மூலமும் ஏற்படுத்த எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

50 0 0
இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

62 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

33 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

53 0 0