உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

தனியார் அனல் மின் நிலையத்தில் பாரிய திருட்டு; இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
38 பார்வைகள்

நீண்ட காலம் செயற்படாமல் இருந்த தனியார் அனல் மின் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் சந்தேகத்தின் பேரில் நிந்தவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீண்ட காலமாக தனியார் அனல் மின் நிலையத்தில் இடம்பெற்று வந்ததாக கூறப்படும் திருட்டு தொடர்பில் உரிமையாளர் முறைப்பாடு ஒன்றினை அண்மையில் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கி இருந்தார்.

இதற்கமைய செயற்பட்ட பொலிஸார் சம்பவ இடத்திற்கு நேற்று சனிக்கிழமை (28) அம்பாறையில் இருந்து தடயவியல் பொலிஸாரை மேலதிக விசாரணைக்கு அழைத்திருந்தனர். அத்துடன் இச் சம்பவத்துடன் தொடர்புடைய காவலாளி உட்பட மற்றுமொரு சந்தேக நபரையும் நிந்தவூர் பொலிஸார் கைது செய்தனர்.

அத்துடன் கைதான சந்தேக நபர்கள் இருவரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதில் ஒரு சந்தேக நபர் வாயு துப்பாக்கி ஒன்றினை வைத்துக் கொண்டு குறித்த தனியார் அனல் மின் நிலையத்தில் உள்ள புறாக்களை வேட்டையாட வந்திருந்ததாக கூறி இருந்தமை ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிவந்துள்ளது.

அத்துடன் சந்தேக நபர் வசம் இருந்து மீட்கப்பட்ட வாயு துப்பாக்கி குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

50 0 0
இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

62 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

33 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

53 0 0