உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மனித உரிமை மீறல்கள் குறித்து முறையான விசாரணை நடக்கும்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரங்கள் தொடர்பில், எவ்வித அரசியல் தலையீடுகளுமின்றிச் சட்டத்தின் அடிப்படையில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

நோர்வே நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற விசேட விவாதத்தின்போது, அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் எஸ்பென் பார்த் ஐடே இலங்கையின் நிலைவரம் குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டிருந்தார். குறிப்பாக, வடக்கு – கிழக்கில் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் செம்மணி புதைகுழி விவகாரத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசு வெளிப்படையான விசாரணைகளை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார ஊடகங்களுக்கு விசேட விளக்கமளித்துள்ளார்.

அமைச்சரின் விளக்கத்தில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு,
“செம்மணி மனிதப் புதைகுழி மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் உள்ளிட்ட கடந்த காலப் பிரச்சினைகள் குறித்துச் சட்ட ரீதியான விசாரணைகள் துரிதப்படுத்தப்படும். இதில் அரசியல் தலையீடுகள் எவையும் இருக்காது. உண்மைகளைக் கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதில் தேசிய மக்கள் சக்தி அரசு உறுதியாக உள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் வசமுள்ள மக்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படும். மக்களின் நிலங்களை ஆக்கிரமிக்கும் நோக்கம் எமது அரசுக்கு இல்லை. இராணுவமயமாக்கல் தொடர்பான கவலைகளுக்குச் செயல்முறை ரீதியான தீர்வுகள் எட்டப்படும்.

வடக்கு – கிழக்கில் மதத் தலங்கள் தொடர்பாக நிலவும் சர்ச்சைகள் மற்றும் மத உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் குறித்து அரசு விசேட கவனம் செலுத்தி வருகின்றது. அனைத்து இன மக்களும் எவ்வித அச்சமுமின்றித் தமது மதங்களைப் பின்பற்றுவதற்கான சமத்துவமான சூழல் மற்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச சமூகம் எழுப்பும் நியாயமான கேள்விகளைப் புறக்கணிக்காது, அவற்றுக்கு உரிய முறையில் பதிலளிக்கப்படும். குறிப்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரைகளைச் சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கும், சர்வதேச இராஜதந்திர உறவுகளைப் பலப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.” – என்றார்.

யுத்தத்தால் ஏற்பட்ட வடுக்களை ஆற்ற வேண்டியதும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பதிலளிக்க வேண்டியதும் அரசின் தார்மீகப் பொறுப்பு எனச் சுட்டிக்காட்டிய நீதி அமைச்சர், இதற்காக ஏற்கனவே உள்ள பொறிமுறைகள் வலுப்படுத்தப்பட்டு, தேவையான சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

50 0 0
இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

62 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

33 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

53 0 0