உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி அன்று வீதியில் இறங்கிய பேராயர் இன்று எங்கே?

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரத்தில், பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தற்போது மௌனம் காப்பது ஏன் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கேள்வி எழுப்பியுள்ளது.

அக்கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ குட்டியாராச்சி இது குறித்து ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது,

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனதான் நடத்தியது என்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்க தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முப்பது வருட காலப் போரை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்த தலைவரைக் கொண்ட எமது கட்சிக்கு, குண்டுகளை வைக்க வேண்டிய எந்தவொரு தேவையும் கிடையாது.

தாக்குதலின் பிரதான சூத்திரதாரியைக் கண்டறிந்து கைது செய்வோம் என்று தேசிய மக்கள் சக்தியினர் மேடைகளில் முழக்கமிட்டனர். தற்போதைய அரசு அந்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

எமது ஆட்சிக் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கோரி பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வீதியில் இறங்கிப் போராடினார். ஆனால், புதிய அரசு பதவியேற்ற பிறகு அவர் மௌனமாக இருக்கின்றார். பேராயர் மீண்டும் வீதிக்கு வந்து, தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டுபிடிக்குமாறு இந்த அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின்படி விசாரணைகளைத் தீவிரப்படுத்தி உண்மைக் குற்றவாளிகளை அரசு வெளிப்படுத்த வேண்டும்.” – என்றும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

50 0 0
இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

62 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

33 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

54 0 0