உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ஈரானில் உள்ள இலங்கையர்களை பாதுகாக்க விரைந்து செயற்படுக.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
28 பார்வைகள்

இஸ்ரேல் – ஈரான் இடையிலான தீவிர இராணுவ மோதல்களை அடுத்து, ஈரானில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“ஈரானில் தற்போது ஏற்பட்டுள்ள தீவிர இராணுவ நடவடிக்கைகளின் காரணமாக, அங்கு வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களின் உயிரைப் பாதுகாக்கவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இலங்கை அரசு உடனடியாக இராஜதந்திர ரீதியிலான மற்றும் அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் நலன் கருதி அரசு கூடுதல் அக்கறையுடன் செயற்பட வேண்டும்.” – என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், சஜித் பிரேமதாஸவின் இந்தப் பதிவு முக்கியத்துவம் பெறுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

50 0 0
இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

62 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

33 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

53 0 0