உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கச்சதீவில் நிலவிய அசாதாரண சூழல்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
37 பார்வைகள்

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா இம்முறை வரலாற்றுச் சாதனையாக 13 ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்புடன் நிறைவடைந்தது. இருப்பினும், திருவிழா நிறைவு பெற்று பக்தர்கள் கச்சதீவிலிருந்து வெளியேற முற்பட்ட போது பாரிய சனநெரிசல் ஏற்பட்டது.

நேற்று காலை நடைபெற்ற கூட்டுத் திருப்பலியைத் தொடர்ந்து, ஒரே நேரத்தில் பெருமளவு பக்தர்கள் தத்தமது ஊர்களுக்குத் திரும்புவதற்காகப் படகுத் துறையை நோக்கி விரைந்தனர்.

பெருமளவு மக்கள் ஒரே இடத்தில் திரண்டதால், படகு ஏறும் பகுதியில் நீண்ட வரிசைகளும் தள்ளுமுள்ளு நிலையும் காணப்பட்டது.

இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தந்த பக்தர்கள் அனைவரும் குறுகிய காலப்பகுதிக்குள் கச்சதீவிலிருந்து வெளியேற முயன்றமையே இந்த நெரிசலுக்குப் பிரதான காரணமாக அமைந்தது.

கடும் வெயிலுக்கு மத்தியில் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் இந்த நெரிசலால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

கடற்படையினர் நிலைமையைக் கட்டுப்படுத்தப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

இம்முறைத் திருவிழாவானது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.

நெடுந்தீவு பங்குத்தந்தை மற்றும் யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் தலைமையில் திருப்பலிகள் இடம்பெற்றன.

இலங்கை மற்றும் இந்தியத் தூதரக அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பு உயர் அதிகாரிகள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

50 0 0
இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

62 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

33 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

53 0 0