இலங்கைத் தமிழரசுக் கட்சி மன்னார் கிளை ஏற்பாட்டில் பொதுமக்கள் சந்திப்பு.!
மன்னார் மாவட்டம் அடம்பன் பகுதியில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாட்டில் பொதுமக்கள் சந்திப்பு இன்று (28) மதியம் நடைபெற்றது.இச்சந்திப்பு, கட்சியின் மன்னார் கிளைத் தலைவரின் தலைமையில் இடம்பெற்றது. இதில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் கலந்துகொண்டார்.
நிகழ்வில் முன்னாள் போராளிகள், பொதுமக்கள், கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதுடன், பிரதேச சபை உறுப்பினர்களும் பங்கேற்றனர்.இச்சந்திப்பின் போது கட்சியின் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. எதிர்வரும் காலங்களில் கட்சி மேற்கொள்ளவுள்ள முடிவுகள் தொடர்பாகவும் பொதுச்செயலாளர் தெளிவுபடுத்தினார்.
