உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் மீட்கப்பட்ட சிசுவின் கருச் சிதைவு!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
30 பார்வைகள்

யாழ்ப்பாணம் நகர மையப்பகுதியில் கருவொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு யாழ். நீதவான் லெனின் குமார் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தின் பின்புறப் பகுதியில், சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய பெண் ஒருவர் பின்னர் அங்கிருந்து காணாமல் போயுள்ளார்.

அதன் பின்னர் அப்பகுதியில் சுமார் ஆறு முதல் ஏழு மாத வயதுடைய கரு வீதியில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த தகவலை அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் கருவை கடிதப்பெட்டியால் மூடி விசாரணைகளை ஆரம்பித்தனர்.

சம்பவ இடத்தில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய பெண், சட்டவிரோத கருக்கலைப்பு செய்த பின்னர் கருவை வீதியில் வீசிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


இந்நிலையில், சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட நீதவான், கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டதுடன், மீட்கப்பட்ட கருவை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கவும் பணித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு
செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

42 0 0
இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

59 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

33 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

52 0 0