உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

குடிநீர் தகராறில் மோதல் – மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
37 பார்வைகள்

ஹட்டன், ருவன்புர பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.குடிநீர் விநியோகம் தொடர்பான தகராறு காரணமாக இந்த மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ருவன்புர பகுதியில் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீரில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக கடந்த 24ஆம் திகதி முதல் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதங்கள் இடம்பெற்று வந்துள்ளன.

பின்னர் நிலைமை தீவிரமடைந்து இரு குழுக்களும் மோதிக்கொண்டதில் ஆறு பேர் காயமடைந்தனர்.காயமடைந்த 39 வயதுடைய நபர் கண்டி போதனா வைத்தியசாலையின்தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் ருவன்புர பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், அவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.


மோதலில் காயமடைந்த ஏனையோர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவரின் சகோதரரும் காயமடைந்தவர்களில் ஒருவராவார் என பொலிஸார் உறுதிப்படுத்தினர்.இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு
செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

42 0 0
இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

59 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

33 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

52 0 0