உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சாதாரண தரம் எழுதிய மாணவர்களுக்கு 15 நாள் இடைவெளிக்குப் பிறகே உயர்தர வகுப்புகள்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

க .பொ.த. சாதாரண தரப் பரீட்சையை எழுதிய மாணவர்களுக்கு 15 நாட்களின் பின்னரே தனியார் கல்வி நிலையங்கள் க.பொ.த. உயர்தரக் கற்றலை ஆரம்பிக்க வேண்டும் என பிரதேச சபைத் தவிசாளர் தெரிவித்துள்ளார்.மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் கல்விப் பொதுத் தர சாதாரண தரப் பரீட்சையை மாணவர்கள் எழுதி முடித்துள்ளனர்.தற்போது இப்பிரதேசத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடியதாகவும் தெரிவித்தார்.

இம்முறை கல்விப் பொதுத் தர சாதாரண தரம் எழுதிய மாணவர்கள் பரீட்சை முடிந்ததும், குறைந்தது 15 நாட்களுக்குப் பின்னர்தான் அடுத்தகட்டமாக அவர்களது உயர்தரக் கற்றலுக்கான வகுப்புகளை ஆரம்பிக்க வேண்டும் என தெரிவித்திருந்ததாகவும் கூறினார்.எனினும், சனிக்கிழமை (28) கல்விப் பொதுத் தர உயர்தரப் பாடங்களுக்காக புதிய வகுப்புகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனது பிரதேச சபையில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படும். இது எமது எதிர்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு, தனியார் கல்வி நிலைய உரிமையாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுக்கும் பணிவான வேண்டுகோள் ஆகும்.பிரதேச சபையால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை மீறும் பட்சத்தில், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவற்றை மீறி செயற்படும் கல்வி நிலையங்கள் மூடப்படும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், புதிதாக தனியார் கல்வி நிலையங்களில் இணையும் மாணவர்களிடமிருந்து எந்தவித முற்பதிவு கட்டணங்களும் பெறக்கூடாது. அவ்வாறு பெற்றால், தனியார் கல்வி நிலையங்களின் அனுமதிப் பத்திரங்கள் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்தார்.

30 வருடப் போராட்டம் முடிவடைந்த பின்னர் எம் சமூகத்திற்கு மிக முக்கியமானது கல்விதான். ஆகவே கல்விக்கு நான் எதிரானவன் அல்ல. கல்வியை சீரான முறையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதையே நான் விரும்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு
செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

42 0 0
இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

59 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

33 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

52 0 0