உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வீதியோரத்தில் நிற்கும் இளைஞர்களை சந்தேகத்தின் பெயரில் கைது செய்யும் மருதங்கேணி பொலிஸார் – அச்சத்தில் வடமராட்சி கிழக்கு மக்கள்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
40 பார்வைகள்

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் வீதியோரங்கள், ஆலய முன்றல்கள், மைதானங்கள் மற்றும் பொது இடங்களில் நிற்கும் இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லப்பட்டு ஆள் பிணையில் விடுவிக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இதற்கிடையில், நேற்று (27.02.2026) மாலை 7 மணியளவில் மருதங்கேணி சந்தியில் இருந்து செம்பியன்பற்று பகுதிக்கு செல்லும் வீதியில் சுமார் 100 மீற்றர் தூரத்தில் நின்றிருந்த மூன்று இளைஞர்கள் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட இளைஞர்கள் தெரிவிப்பதாவது, அவர்களில் ஒருவர் தனது இருசக்கர வண்டிக்கு எரிபொருள் இல்லாத காரணத்தால் அருகிலுள்ள கடையில் எரிபொருள் பெற வந்திருந்ததாகவும், மற்றவர்கள் இரவு நேர கரப்பந்தாட்டப் பயிற்சிக்காகசெம்பியன்பற்று செல்ல வாகனத்துக்காக காத்திருந்ததாகவும் கூறியுள்ளனர்.


சுமார் ஐந்து நிமிடங்கள் அங்கு நின்றிருந்தபோது, தம்மை பொலிஸார் என அடையாளப்படுத்திய அதிகாரிகள் வாகனத்தில் வந்து, விளக்கம் அளிக்க முயன்ற போதிலும் கருத்தை ஏற்காமல் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்களிடம் அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

சுமார் ஐந்து மணிநேரங்கள் பொலிஸ் நிலையத்தில் வைத்திருந்த பின்னர், தலா ரூபா 50,000 பெறுமதியான ஆள் பிணையில் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இச்சம்பவம் தொடர்பாக, “எந்த குற்றமும் செய்யாத நிலையில், சுதந்திரமாக நடமாடுவதற்கே பயம் உருவாகியுள்ளது” என பாதிக்கப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நடவடிக்கைகள் ஜனநாயக நாட்டில் இடம்பெறக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.மேலும், இச்சம்பவம் தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் மற்றும் அரசியல் தரப்பினரிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு
செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

42 0 0
இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

59 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

33 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

52 0 0