உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கல்முனை பிரதான வீதியில் விபத்து – உழவு இயந்திர சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
39 பார்வைகள்

கல்முனை பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில், உழவு இயந்திரம் ஒன்றின் மீது பாரவூர்தி ஏறிய நிலையில், உழவு இயந்திரத்தின் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.மண்முனை தென் எருவில் பற்று (களுதாவளை) பிரதேச சபைக்குச் சொந்தமான பாரவூர்தி ஒன்று களுவாஞ்சிகுடி பகுதியில் பழுதடைந்த நிலையில் நின்றிருந்தது. குறித்த வாகனத்தை பழுதுபார்ப்பதற்காக, உழவு இயந்திரத்தின் உதவியுடன் சங்கிலியால் கட்டி இழுத்துச் செல்லும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


இந்நிலையில், களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, பின்னால் இழுத்துச் செல்லப்பட்ட பாரவூர்தி எதிர்பாராத விதமாக வேகக் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற உழவு இயந்திரத்தின் மீது ஏறியுள்ளது.

அபாயத்தை உணர்ந்த உழவு இயந்திர சாரதி சாமர்த்தியமாக கீழிறங்கி தப்பியதால், அவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. எனினும், விபத்தினால் உழவு இயந்திரம் கடுமையாக சேதமடைந்துள்ளது.


சம்பவ இடத்துக்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸார், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். வாகனங்களை இழுத்துச் செல்லும் போது தேவையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பதும் ஆராயப்பட்டு வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ மற்றும் ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோருக்கு
செப்டெம்பர் 3 வரை விளக்கமறியல்

படம் இணைப்பு – ‘கெஹெல்பத்தர பத்மே’, ‘பாணந்துறை நிலங்க’ ஆகியோர்செப்டெம்பர் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பு! பிரபல பாதாள உலகக் கும்பல் தலைவர் எனக் கருதப்படும்…

42 0 0
இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

59 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

33 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

52 0 0