உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வலியுறுத்தி வடக்கு – கிழக்கில் மக்கள் போராட்டம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
40 பார்வைகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்றும், அதற்குப் பதிலாகக் கொண்டு வர முயற்சிக்கப்படும் புதிய சட்டத்தை நிறுத்த வேண்டும் என்றும் கோரி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய மக்கள் போராட்டம் இன்று யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நடைபெற்றது.


மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் ஆரம்பமான எதிர்ப்புப் பேரணி, காந்திப் பூங்காவை அடைந்து அங்கு ஆர்ப்பாட்டமாக நடைபெற்றது. மதத் தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.


போராட்டத்தின் போது, “பயங்கரவாதத் தடைச் சட்டமும் வேண்டாம், புதிய சட்டமும் வேண்டாம்”, “மக்களை ஒடுக்கும் சட்டங்கள் வேண்டாம்” போன்ற வாசகங்களை ஏந்தியவாறு பங்கேற்பாளர்கள் கோஷமிட்டனர்.போராட்டத்தின் இறுதியில், ஐக்கியநாடுகள் சபை மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு அனுப்புவதற்காக தயாரிக்கப்பட்ட அறிக்கை வாசிக்கப்பட்டது.


அதில், தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும், அதற்குப் பதிலாகக் கொண்டு வர முயற்சிக்கப்படும் புதிய சட்டத்தையும் முழுமையாக எதிர்ப்பதாகவும், இச்சட்டங்கள் மனித உரிமைகளை மீறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்தச் சட்டங்கள் தமிழ் மக்களின் உரிமைகள், கருத்துச் சுதந்திரம், நீதி கோரும் உரிமை ஆகியவற்றை பாதிப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.


அதேபோல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நில அபகரிப்பு, இராணுவ நிலைமை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக வெளிப்படையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டது.


பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையைஇலங்கை அரசும் சர்வதேச சமூகமும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

55 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

27 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

50 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொது நிகழ்வுகளில் ஒளிப் பயன்பாடு குறித்து முக்கிய தீர்மானம்!

திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை உருவாக்குவதற்கும்,…

71 0 0