உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ஜேர்மனியின் பிரேமன் மேயருடன் விஜித ஹேரத் சந்திப்பு! – தொழில்துறை மற்றும் சுற்றுலாத்துறை குறித்துக் கலந்துரையாடல்.

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
41 பார்வைகள்

யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமாக அங்கீகரிக்கப்பட்ட ஜேர்மனியின் பிரேமன் நகர மண்டபத்தில் பிரேமன் மேயர் ஆண்ட்ரியாஸ் போவன்சுல்ட் வழங்கிய சிறப்பான வரவேற்புக்கு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அமைச்சர் விஜித ஹேரத் தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், பிரேமன் மேயருடனான சந்திப்பின் போது இருதரப்பு தொழில்துறை ஒத்துழைப்பு குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக வாகன உற்பத்தி, வர்த்தகம் மற்றும் தளபாடங்கள் உள்ளிட்ட துறைகளில் பிரேமன் நகரத்தின் அனுபவம் மற்றும் வலிமையை இலங்கையின் தற்போதைய பொருளாதார வாய்ப்புகளுடன் இணைப்பது குறித்து ஆராயப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜேர்மனிய சுற்றுலாப் பயணிகள் மத்தியில் இலங்கை ஒரு பிரபலமான தலமாகத் தொடர்வதை சுட்டிக்காட்டிய அமைச்சர், சுற்றுலாத்துறை சார்ந்த ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் வாய்ப்புகள் குறித்தும் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக கூறினார்.
இலங்கை மற்றும் ஜேர்மனிக்கு இடையிலான பொருளாதார மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்த இந்தச் சந்திப்பு முக்கியமான படியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

55 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

27 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

50 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொது நிகழ்வுகளில் ஒளிப் பயன்பாடு குறித்து முக்கிய தீர்மானம்!

திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை உருவாக்குவதற்கும்,…

71 0 0