உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச்சூடு வழக்கு: பெண் உட்பட இருவர் போதைப்பொருளுடன் கைது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
38 பார்வைகள்

கொழும்பு, ஜிந்துப்பிட்டி பகுதியில் கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இந்தக் கைது இடம்பெற்றது.


சேதவத்தை பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஆண் ஒருவர் கடவத்தை – சூரியபாலுவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல், வெஹெரகொடெல்ல பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண் ஒருவர் வெல்லம்பிட்டிய – வெஹெரகொடெல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஆரம்ப விசாரணைகளின்படி, கைது செய்யப்பட்ட ஆண் சந்தேகநபர் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை ஆயுதத்துடன் தனது ஓட்டோவில் அழைத்துச் சென்ற சாரதியாக செயற்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது. பெண் சந்தேகநபர் அவருக்கு உதவியாகஇருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட போது ஆண் சந்தேகநபரிடமிருந்து 6 கிராம் 540 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும், பெண் சந்தேகநபரிடமிருந்து 3 கிராம் 100 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் இருவரையும் 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

55 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

27 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

50 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொது நிகழ்வுகளில் ஒளிப் பயன்பாடு குறித்து முக்கிய தீர்மானம்!

திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை உருவாக்குவதற்கும்,…

71 0 0