உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

கடமை தவறிய பொலிஸ் சார்ஜன்ட் பணி இடைநீக்கம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

சோதனை நடவடிக்கைகளுக்காகச் செல்வதாகப் பொலிஸ் புத்தகத்தில் பதிவு செய்து, பின்னர் விடுதி ஒன்றில் பெண்ணொருவருடன் தங்கியிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் தலைமையகம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.


வெலிப்பன்ன பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் குறித்த சார்ஜன்ட், நிலையப் பொறுப்பதிகாரி எம்.கே. அனுரஜித்தின் உத்தரவின் பேரில் விசேட சோதனைக்குச் செல்வதாகக் கூறி கடமையிடத்திலிருந்து வெளியேறியுள்ளார். இதற்கான உத்தியோகபூர்வ பதிவுகளையும் அவர் மேற்கொண்டிருந்தார்.


இருப்பினும், கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில், அவர் மத்துகம – அகலவத்தை வீதியிலுள்ள விடுதி அறையில் பெண்ணொருவருடன் இருந்தது தெரியவந்துள்ளது.


இதனைத் தொடர்ந்து, கடமைதவறியமை மற்றும் ஒழுக்க விதிகளை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவரது பணி உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

55 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

27 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

50 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொது நிகழ்வுகளில் ஒளிப் பயன்பாடு குறித்து முக்கிய தீர்மானம்!

திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை உருவாக்குவதற்கும்,…

71 0 0