உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மாற்றுத் தீர்வு வரை மாகாண சபைகள் நீக்கமில்லை – ரில்வின் சில்வா தெரிவிப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

இனப்பிரச்சினைக்கு நிலையான மாற்றுத் தீர்வொன்றை கண்டுபிடிக்கும் வரை மாகாண சபை முறைமை நீக்கப்படமாட்டாது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,

இனப்பிரச்சினைக்கான சரியான தீர்வை உருவாக்குவது தொடர்பாக தங்களது தேர்தல் அறிக்கையிலேயே உறுதியளித்திருந்ததாகவும், மாகாண சபைகள் அந்த நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றவில்லை என்பது தங்களது நிலைப்பாடாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். இருப்பினும், சிறந்த மாற்றுத் தீர்வை எட்டாமல் மாகாண சபைகளை அகற்றப்போவதில்லை எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சிக் காலத்தில் உருவான சட்டச் சிக்கல் காரணமாகவே தற்போது மாகாண சபைகளை இயங்கச் செய்ய முடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்தார். இந்த ஆண்டில் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டமிட்டிருந்த போதிலும், ‘டித்வா’ புயல் அனர்த்தத்தால் அது சாத்தியமாகவில்லை என்றும் கூறினார்.


மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றாலும், தேர்தலை நடத்துவதற்கு தடையாக உள்ள சட்டச் சிக்கல்கள் நீக்கப்பட வேண்டும் எனவும், எல்லை நிர்ணய நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனை விரிவாக ஆய்வு செய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

55 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

27 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

50 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொது நிகழ்வுகளில் ஒளிப் பயன்பாடு குறித்து முக்கிய தீர்மானம்!

திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை உருவாக்குவதற்கும்,…

71 0 0