கச்சதீவில் தமிழக வெற்றிக் கழகக் கொடியுடன் பயணித்த இலங்கை இளைஞர்கள்.!
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தில் கலந்து கொள்ள இலங்கையிலிருந்து சென்ற படகு ஒன்றில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சிக் கொடி பறக்கவிடப்பட்டிருந்தது அங்கு கூடியிருந்த இந்திய யாத்திரிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.
ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா நேற்று கோலாகலமாக ஆரம்பமானது. இவ்வருட உற்சவத்தில் இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.இந்நிலையில், இலங்கையிலிருந்து சிறிய படகு ஒன்றில் பயணித்த சில இளைஞர்கள், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியை ஏந்தியவாறு கச்சதீவுக்குச் சென்றனர்.
இலங்கைப் படகில் தமிழக அரசியல் கட்சியின் கொடி பறப்பதைக் கண்ட இந்திய யாத்திரிகர்களும்ஏனைய பக்தர்களும் அதனை வியப்புடனும் ஆர்வத்துடனும் கவனித்தனர்.இந்த சம்பவம் திருவிழா சூழலில் பேசுபொருளாக மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.