உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சுரேஷ் சலே கைது: “பிரிவினைவாதிகளைத் திருப்திப்படுத்தும் நடவடிக்கை” – சம்பத் அத்துகோரல தெரிவிப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
36 பார்வைகள்

அரசுப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது நடவடிக்கை, பிரிவினைவாதிகளை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பத் அத்துகோரல தெரிவித்துள்ளார்.கொழும்பில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போது அவர் இதனை குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,


உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளை கண்டறிந்து, பாதிக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த அரசு, 16 மாதங்கள் கடந்தும் அதனை நிறைவேற்றத் தவறியுள்ளதாக கூறினார்.

கடந்த ஏப்ரல் மாதத்திலேயே பிரதான சூத்திரதாரி வெளிப்படுத்தப்படுவார் என ஜனாதிபதி அறிவித்திருந்ததாகவும், அது நடைமுறைக்கு வராத நிலையில்தற்போது ஏப்ரல் மாதம் நெருங்கும் சூழலில் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.


இந்தக் கைதின் மூலம் ஜனாதிபதி பிரிவினைவாதிகளையும் கத்தோலிக்க சமூகத்தினரையும் திருப்திப்படுத்த முயற்சிக்கின்றார் என்றும், அரசுக்கு எதிராக முன்வைக்கப்படும் பிற குற்றச்சாட்டுகளிலிருந்து கவனம் திருப்புவதற்காகவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


மேலும், சில அதிகாரிகளை பயன்படுத்தியே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமது நாட்டின் புலனாய்வுத் துறையை பலவீனப்படுத்த எந்த நாட்டுத் தலைவரும் முயற்சிப்பதில்லை என்றும், ஆனால் தற்போதைய அரசு அரசியல் காரணங்களுக்காக புலனாய்வுத் துறையை பாதிக்கும் வகையில் செயல்பட்டுள்ளதாகவும் சம்பத்அத்துகோரல குற்றஞ்சாட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கபரகல மக்களுக்கு வீடுகளுடன் சேர்த்து வீட்டு உபகரணங்களும் வழங்கிவைப்பு!

2023 மார்ச் 19 அன்று ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்து, கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலை ஒன்றில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வந்த…

55 0 0
இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

27 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

50 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொது நிகழ்வுகளில் ஒளிப் பயன்பாடு குறித்து முக்கிய தீர்மானம்!

திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை உருவாக்குவதற்கும்,…

71 0 0