உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆன்மீக ஒளி பரப்பிய ஞானசுடர் வெளியீடு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
36 பார்வைகள்

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் மாதாந்தம் வெளியிடப்படும் “ஞானசுடர்” ஆன்மீக மலரின் 338ஆவது இதழ் வெளியீடு இன்று காலை சந்நிதியான் ஆச்சிரமத்தில் நடைபெற்றது.
ஆச்சிரமத்தின் முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.


இந்நிகழ்வில் வெளியீட்டுரையை சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி சிந்துரா கலியுகவரதன் ஆற்றியதுடன், மதிப்பீட்டுரையை ஓய்வுநிலை ஆசிரியர் திருமதி புனிதவதி சண்முகலிங்கம் நிகழ்த்தினார்.

தொடர்ந்து சிறப்பு பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.இதேவேளை, 2025ஆம் ஆண்டு “ஞானசுடர்” மலருக்காக வாசகர்களிடையே நடத்தப்பட்ட போட்டியில் பங்கேற்று வெற்றியடைந்தவர்களுக்கு முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களுக்கான பரிசுகளும், 10 ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.


இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், ஆச்சிரமத் தொண்டர்கள் மற்றும் அடியவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஹட்டனில் இடம்பெற்ற அஸ்வெசும நிதி மோசடி : கைது செய்யப்பட்ட பெண் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ‘அஸ்வசும’ நலத்திட்ட நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08ஆம் திகதி வரை மீண்டும்…

24 0 0
இலங்கை செய்திகள்

ஈஸ்டர் சம்பவ விசாரணை : சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு!

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள்…

45 0 0
இலங்கை செய்திகள்

வடக்கில் பொது நிகழ்வுகளில் ஒளிப் பயன்பாடு குறித்து முக்கிய தீர்மானம்!

திருவிழாக்கள் மற்றும் பொது கொண்டாட்டங்களின்போது அதீத ஒளி கொண்ட மின்விளக்குகள், வாணவேடிக்கைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்காக வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக உடனடியாக நியமத்துணைவிதிகளை உருவாக்குவதற்கும்,…

68 0 0
இலங்கை செய்திகள்

வடக்குக்கு முதலீட்டாளர்கள் வரும்போது நிர்வாகத் தடைகள் காரணமாக திரும்பிச் செல்லக்கூடாது.!

வடக்கு மாகாணத்துக்கு முதலீட்டாளர்கள் வருகை தரும்போது, நிர்வாகத் தடைகள் காரணமாக விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்படக் கூடாது. சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களுக்கு உரிய அனுமதிகளை…

52 0 0