உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மாடு கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
32 பார்வைகள்

மாடு கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீரவானி சந்திப் பகுதியில் வைத்து இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு சிறிய ரக லொறி ஒன்றில் மாடுகளை கடத்திச் சென்ற சந்தர்ப்பத்தில் காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது சந்தேகநபரால் கடத்தப்பட்ட 9 மாடுகள் மீட்கப்பட்டுள்ளன.

கைதானவர் 25-30 வயது மதிக்கதக்கவர் என்றும், அவரை அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைத்து மேலதிக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

குறித்தப் பகுதியில் நீண்ட காலமாக மாடுகள் திருடப்பட்டு வந்த நிலையில் காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பிரிவினால் இந்த அதிரடி சுற்றிவளைப்பில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்குக்கு முதலீட்டாளர்கள் வரும்போது நிர்வாகத் தடைகள் காரணமாக திரும்பிச் செல்லக்கூடாது.!

வடக்கு மாகாணத்துக்கு முதலீட்டாளர்கள் வருகை தரும்போது, நிர்வாகத் தடைகள் காரணமாக விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்படக் கூடாது. சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களுக்கு உரிய அனுமதிகளை…

47 0 0
இலங்கை செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் திறந்து வைப்பு.!

மன்னார் நலன்புரி சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் நிதியுதவியுடன் மூன்றாவது மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் மடு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மன்னார் நலன்புரி…

57 0 0
இலங்கை செய்திகள்

ஓ.எம்.பி. நிகழ்வைக் கண்டித்து யாழில் போராட்டம்; பொலிஸார் குவிக்கப்பட்டு அராஜகம் அரங்கேற்றம்.!

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் எனவும், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? எனக் கோரியும் வடக்கு…

72 0 0
இலங்கை செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்.!

இன்றைய தினம் (25) ஹட்டன், நோட்டன், கினிக்கத்தேன, வட்டவளை, மஸ்கெலியா. சாமிமலை, நோர்வூட், டிக்கோயா, நல்லதண்ணி, கொட்டகலை, தலவாக்கலை, மெராயா, லிந்துல, அக்கரபத்தனை, பசுமலை, நானுஓயா, நுவரெலியா…

57 0 0