உழவு இயந்திரத்தில் ஏற முயன்ற சிறுவன் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு.!
குருநாகல், கல்கமுவ பகுதியில் உழவு இயந்திரத்தில் சிக்கி 15 வயதுடைய சிறுவன் ஒருவன் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற இச் சம்பவத்தின் போது, மேற்படி சிறுவன் பயணித்துக்கொண்டிருந்த உழவு இயந்திரத்தின் சாரதி இருக்கைக்கு அருகில் ஏற முயற்சித்துள்ளார். இதன்போது எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்த சிறுவன், உழவு இயந்திரத்தின் சக்கரத்தில் சிக்கிப் படுகாயமடைந்துள்ளார்.
உடனடியாக அவர் மீட்கப்பட்டு கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர் மஹநான்னேரிய பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் எனப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கல்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.