உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சட்டம் தன் கடமையைச் செய்யும் போது எதிர்க்கட்சியினர் ஏன் அச்சப்படுகின்றனர்?

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
36 பார்வைகள்

நாட்டில் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படும் போது ஏற்படும் அச்சத்தையே எதிர்க்கட்சியினர் கூச்சலிட்டு வெளிப்படுத்தி வருகின்றனர் என்றும், அவற்றை அரசு ஒருபோதும் பொருட்படுத்தாது என்றும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.

ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
“எதிர்க்கட்சிகள் காலத்துக்குக் காலம் ஒவ்வொரு பேசுபொருள்களை உருவாக்கி, அரசின் மீது வீணான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றன. கடந்த ஆண்டு கொள்கலன்கள் குறித்துப் பேசினார்கள், இப்போது வேறு விடயங்களைக் கையில் எடுக்கின்றார்கள். அவர்களால் முன்வைக்கப்படும் அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் நாம் நாடாளுமன்றத்தில் தகுந்த பதிலளித்துள்ளோம்.

குறிப்பாக, நிலக்கரி விவகாரத்தில் எவ்வித மோசடியும் இடம்பெறவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளோம். நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக, மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே அனைத்துத் தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களைப் போலன்றி, தற்போது நீதித்துறை சுயாதீனமாக்கப்பட்டுள்ளதால் அரசியல் தலையீடுகள் இன்றி எவரும் சட்டத்தை நாட முடியும்.

சமையல் எரிவாயுப் பிரச்சினை ஏற்பட்ட போது, மிகக் குறுகிய காலத்தில் அதற்குத் தீர்வை வழங்கினோம். அரசின் மீதான மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருவதுடன், ஊழல் மற்றும் மோசடிகள் ஒழிக்கப்பட்டு பொருளாதாரம் சீரான பாதையில் பயணிக்கின்றது. அரசின் இந்த வெற்றிகரமான பயணத்தால் எதிர்க்கட்சிகளின் அரசியலுக்கு இடமில்லாமல் போயுள்ளது. இதன் காரணமாகவே, சட்டம் தன் கடமையைச் செய்யும்போது அவர்கள் அச்சமடைந்து கூச்சலிடுகின்றனர்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்குக்கு முதலீட்டாளர்கள் வரும்போது நிர்வாகத் தடைகள் காரணமாக திரும்பிச் செல்லக்கூடாது.!

வடக்கு மாகாணத்துக்கு முதலீட்டாளர்கள் வருகை தரும்போது, நிர்வாகத் தடைகள் காரணமாக விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்படக் கூடாது. சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களுக்கு உரிய அனுமதிகளை…

47 0 0
இலங்கை செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் திறந்து வைப்பு.!

மன்னார் நலன்புரி சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் நிதியுதவியுடன் மூன்றாவது மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் மடு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மன்னார் நலன்புரி…

57 0 0
இலங்கை செய்திகள்

ஓ.எம்.பி. நிகழ்வைக் கண்டித்து யாழில் போராட்டம்; பொலிஸார் குவிக்கப்பட்டு அராஜகம் அரங்கேற்றம்.!

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் எனவும், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? எனக் கோரியும் வடக்கு…

72 0 0
இலங்கை செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்.!

இன்றைய தினம் (25) ஹட்டன், நோட்டன், கினிக்கத்தேன, வட்டவளை, மஸ்கெலியா. சாமிமலை, நோர்வூட், டிக்கோயா, நல்லதண்ணி, கொட்டகலை, தலவாக்கலை, மெராயா, லிந்துல, அக்கரபத்தனை, பசுமலை, நானுஓயா, நுவரெலியா…

57 0 0