உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

உயர் தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
35 பார்வைகள்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர் தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகளை இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கமைய, தொழில்நுட்பப் பாடங்களில் உள்ள பொறிமுறைகள் தொழில்நுட்பப் பாடத்திற்கான செய்முறைப் பரீட்சைகள் எதிர்வரும் மார்ச் 6 ஆம் திகதி முதல் மார்ச் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

மேலும், கலைத் துறையைச் சார்ந்த நாட்டியம் (தேசிய மற்றும் பரதம்), சங்கீதம் (கீழைத்தேய மற்றும் மேலைத்தேய), நாடகமும் அரங்கியலும் (சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம்) ஆகிய பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் மார்ச் 9 ஆம் திகதி முதல் மார்ச் 16 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

இது தொடர்பான மேலதிக விபரங்களும் அறிவுறுத்தல்களும் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆவணத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்குக்கு முதலீட்டாளர்கள் வரும்போது நிர்வாகத் தடைகள் காரணமாக திரும்பிச் செல்லக்கூடாது.!

வடக்கு மாகாணத்துக்கு முதலீட்டாளர்கள் வருகை தரும்போது, நிர்வாகத் தடைகள் காரணமாக விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்படக் கூடாது. சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களுக்கு உரிய அனுமதிகளை…

47 0 0
இலங்கை செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் திறந்து வைப்பு.!

மன்னார் நலன்புரி சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் நிதியுதவியுடன் மூன்றாவது மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் மடு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மன்னார் நலன்புரி…

57 0 0
இலங்கை செய்திகள்

ஓ.எம்.பி. நிகழ்வைக் கண்டித்து யாழில் போராட்டம்; பொலிஸார் குவிக்கப்பட்டு அராஜகம் அரங்கேற்றம்.!

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் எனவும், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? எனக் கோரியும் வடக்கு…

72 0 0
இலங்கை செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்.!

இன்றைய தினம் (25) ஹட்டன், நோட்டன், கினிக்கத்தேன, வட்டவளை, மஸ்கெலியா. சாமிமலை, நோர்வூட், டிக்கோயா, நல்லதண்ணி, கொட்டகலை, தலவாக்கலை, மெராயா, லிந்துல, அக்கரபத்தனை, பசுமலை, நானுஓயா, நுவரெலியா…

57 0 0