உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மலையக தொடருந்து பாதையை அண்டிய வனப்பகுதியில் தீப்பரவல்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
26 பார்வைகள்

மலையக ரயில் பாதையின் ஹற்றன் மற்றும் ரொசல்ல தொடருந்து நிலையங்களுக்கு இடையில், 106 ¾ மைல் கல்லுக்கு அருகிலுள்ள இலுக்கு வனப்பகுதியில் இன்று பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

பிரதேசத்தில் நிலவும் கடும் வறண்ட வானிலையுடன் தொடருந்து பாதையை அண்டியுள்ள தேயிலை தோட்டங்களில் வசிக்கும் மக்கள் அந்த பாதையினூடாக பயணிக்கின்றனர்.அவ்வாறு பயணித்த எவரேனும் இந்த வனப்பகுதிக்கு தீ வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.மலையகத்ததில் தொடரும் வரட்சியான  காலநிலையால் காடுகளுக்கு தீ வைக்கும் விஷமச் செயல் அதிகரித்துள்ளது.

இதேவேளை தலவாக்கலை , நானுஓயா, ஹட்டன் மற்றும்  பொகவந்தலாவை பிரதேசங்களில் காட்டுத் தீ பரவல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.இவ்வாறு கடந்த நாட்களில் ஏற்படும் தீ பரவலினால் பல ஏக்கர் காடுகள் எரிந்தது தொடர்ந்து இவ்வாறு தீ வைக்கும் செயல் இடம்பெற்று வருதால் நீரேந்தும் பகுதிகளில்  நீர் வற்றி காணப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வடக்குக்கு முதலீட்டாளர்கள் வரும்போது நிர்வாகத் தடைகள் காரணமாக திரும்பிச் செல்லக்கூடாது.!

வடக்கு மாகாணத்துக்கு முதலீட்டாளர்கள் வருகை தரும்போது, நிர்வாகத் தடைகள் காரணமாக விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்படக் கூடாது. சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களுக்கு உரிய அனுமதிகளை…

47 0 0
இலங்கை செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் திறந்து வைப்பு.!

மன்னார் நலன்புரி சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் நிதியுதவியுடன் மூன்றாவது மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்கூடம் மடு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (25) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மன்னார் நலன்புரி…

57 0 0
இலங்கை செய்திகள்

ஓ.எம்.பி. நிகழ்வைக் கண்டித்து யாழில் போராட்டம்; பொலிஸார் குவிக்கப்பட்டு அராஜகம் அரங்கேற்றம்.!

காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் எனவும், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? எனக் கோரியும் வடக்கு…

72 0 0
இலங்கை செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்.!

இன்றைய தினம் (25) ஹட்டன், நோட்டன், கினிக்கத்தேன, வட்டவளை, மஸ்கெலியா. சாமிமலை, நோர்வூட், டிக்கோயா, நல்லதண்ணி, கொட்டகலை, தலவாக்கலை, மெராயா, லிந்துல, அக்கரபத்தனை, பசுமலை, நானுஓயா, நுவரெலியா…

57 0 0