சாரதி அனுமதிபத்திரமின்றி இரு சக்கர வாகனம் செலுத்திய மாணவன் விபத்து.!
கிளிநொச்சியில் இன்று மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் மாணவன் ஒருவர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மாணவன் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவனே இவ்விபத்தில் சிக்கியுள்ளார். இன்று பரீட்சையை எழுதி முடித்து வீட்டுக்கு வந்த பின்னர், மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று கடைக்குச் சென்ற வேளையில் விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மாணவனுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை என கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளின் பின்னர் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிகவிசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.