உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
6 செவ்வாய்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

மன்னார் நகர சபை மாதாந்த அமர்வு; ஊடகங்களுக்கு அனுமதி இல்லை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
76 பார்வைகள்

மன்னார் நகர சபையின் 9 ஆவது மாதாந்த அமர்வு இன்று வியாழக்கிழமை (26) காலை 10 மணியளவில் தலைவர் டானியல் வசந்தன் தலைமையில் ஆரம்பமானது.

எனினும் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு குறித்த அமர்வில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை.

நகர சபையின் மாதாந்த அமர்வில் கலந்து கொண்டு செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு நகர சபையின் தவிசாளரினால் எழுத்து மூலம் அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

எனினும் இன்றைய தினம் வியாழக்கிழமை மன்னார் நகர சபையின் 09 ஆவது அமர்வு இடம்பெற்றுள்ள போதும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

கடந்த அமர்வில் சபையில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டதோடு, சில உறுப்பினர்கள் தவிசாளருக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை முன்வைத்ததோடு, நகர சபையின் தவிசாளருக்கும் முன்னாள் தவிசாளருக்கும் இடையில் பாரிய தர்க்க நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் நகர சபை தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற தர்க்க நிலை ஊடகங்களில் வெளியாகிய நிலையில், மக்கள் மத்தியில் பாரிய விமர்சனங்கள் ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை (26) இடம்பெற்ற நகர சபையின் 9ஆவது அமர்வுக்கு செய்தி சேகரிக்க ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என அறிய முடிகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.!

இஸ்லாம் மார்க்கத்தை அவமித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும்…

75 0 0
இலங்கை செய்திகள்

வர்த்தக நிலையத்தில் தீ விபத்து.!

பொகவந்தலாவ நகரில் உள்ள வர்த்தக நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று 5 ஆம் திகதி நள்ளிரவு 11.50 இடம்பெற்றுள்ளது என பொகவந்தலாவ பொலிஸ்…

66 0 0
இலங்கை செய்திகள்

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு.!

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு வக்பு சபையினால் நியமிக்கப்பட்ட 11 பேர் கொண்ட விசேட நிர்வாக சபையின் முக்கிய பதவிகளுக்கான தெரிவுகள் நேற்று திங்கட்கிழமை (05) முறைப்படி…

68 0 0
இலங்கை செய்திகள்

கிரிஷ் வழக்கு; நாமல் ராஜபக்ஷ, ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு.!

கிரிஷ் பணப்பரிவர்த்தனை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் குறித்த நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளரான ஜானகி…

67 0 0