உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சுங்க அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
41 பார்வைகள்

கடந்த 6 வருடங்களாக தாமதிக்கப்பட்டுள்ள பதவி உயர்வுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

தமது பிரச்சினைகள் குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரை முறையான தீர்வுகள் வழங்கப்படவில்லை என சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று முதல் நாடு முழுவதுமுள்ள அனைத்து சுங்க அலுவலகங்களிலும் கறுப்புப் பட்டிகளை அணிந்து கடமைகளில் ஈடுபட அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக எதிர்வரும் 26 ஆம் திகதி நிதி அமைச்சு, அரச சேவை ஆணைக்குழு உள்ளிட்ட பல தரப்புகளுடன் விசேட பேச்சுவார்த்தையொன்று நடைபெறவுள்ளது.குறித்த பேச்சுவார்த்தையின் முடிவுகளின் அடிப்படையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கூடி, தமது தொழிற்சங்க நடவடிக்கையின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

48 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

26 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

56 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

53 0 0