உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

சஜித் எமது கட்சித் தலைவர் அல்லர்; அவரைக் கட்டுப்படுத்தவே முடியாது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
31 பார்வைகள்

“எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் எமக்கும் இடையிலானது ஒரு தேர்தல் கூட்டணி உடன்படிக்கை மாத்திரமே. அவர் எமது கட்சித் தலைவர் அல்லர். எனவே, அங்கே போகாதீர்கள், இங்கே போகாதீர்கள் என்று சஜித்தை எம்மால் கட்டுப்படுத்த முடியாது.” – இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் நகர்வுகள் மற்றும் கூட்டணியின் சுதந்திரத் தன்மை குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தனித்துவமான கட்சிகள்
“எமது கட்சி தமிழ் முற்போக்குக் கூட்டணி, சஜித் பிரேமதாஸவின் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி. இவை இரண்டும் ஒன்றல்ல. ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையிலான தேர்தல் உடன்பாட்டிலேயே நாம் இணைந்துள்ளோம். அவர் ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற தேசியக் கூட்டணியின் தலைவரே தவிர, எமது கட்சியின் தலைவர் அல்லர். எனவே, ‘அங்கே போகாதீர்கள், இங்கே போகாதீர்கள்’ என அவரை நாம் கட்டுப்படுத்த முடியாது; அவரும் எம்மை அவ்வாறு கட்டுப்படுத்துவதில்லை.” – என்றார்.

தற்போதைய அரசியல் சூழலை விளக்குவதற்கு ஜே.வி.பியின் கடந்தகால வரலாற்றை உதாரணமாகக் காட்டிய மனோ எம்.பி.,
“2004 இல் சந்திரிகா தலைமையிலான கூட்டணியிலும், பின்னர் 2005 இல் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்கும் அநுர தலைமையிலான ஜே.வி.பி. புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே செயற்பட்டது. அன்று அவர்கள் எப்படி ஒரு கூட்டணியாகச் செயற்பட்டார்களோ, அதேபோன்ற ஒரு நடைமுறையையே இன்று தமிழ் முற்போக்குக் கூட்டணியும் சஜித் தலைமையிலான கட்சியுடன் பின்பற்றி வருகின்றது.

சிறுபான்மை மக்களின் அரசியல் நிர்ப்பந்தம்
நாடாளுமன்ற வாக்களிப்பின் போது கூட நாம் சுயாதீனமாக முடிவுகளை எடுக்கின்றோம். நாட்டில் நடைமுறையில் உள்ள தேர்தல் சட்டங்களே இவ்வாறான அரசியல் கூட்டணிகளுக்குக் காரணமாகின்றன.

குறிப்பாக, தென்னிலங்கையில் சிறுபான்மையாக வாழும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்குத் தற்போதைய சூழலில் இத்தகைய கூட்டணிகளைத் தவிர வேறு மாற்று வழிகள் கிடையாது.” – என்று மனோ எம்.பி. சுட்டிக்காட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

48 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

26 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

56 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

53 0 0