உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; ஒருவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
48 பார்வைகள்

கொழும்பு – ஹைலெவல் வீதியின் பன்னிப்பிட்டிய பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பன்னிப்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து பிரதான வீதிக்குள் நுழைய முயன்ற முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதுவதைத் தவிர்க்க பேருந்து சாரதி முயற்சித்துள்ளார். இதன்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தியுடன் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது எனவும், ஏனைய இருவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர் எனவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து காரணமாக ஹைலெவல் வீதியின் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பன்னிப்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தண்ணீர் என நினைத்து இரசாயனத்தை பருகிய சிறுமி உயிரிழப்பு.!

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து…

48 0 0
இலங்கை செய்திகள்

மலையக ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் பாதிப்பு.!

மத்திய மலைநாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட டித்வா சூறாவளியாலும் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதமடைந்த மலையக ரயில் பாதையில், ஹட்டன்…

26 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நகரசபை வாகனம்; செயலாளர் மீது குற்றச்சாட்டு.!

சாவகச்சேரி நகரசபையின் செயலாளர் சபையினை தவறாக வழிநடத்தி தினமும் வீட்டில் இருந்து அலுவலகம் சென்று வருவதற்காக நகரசபையின் வாகனத்தை சட்டவிரோதமாக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை. இலங்கை நிர்வாக…

56 0 0
இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

53 0 0