உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தோட்ட கமிட்டி தலைவர்களுக்கான விசேட கூட்டம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
29 பார்வைகள்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தோட்ட கமிட்டி தலைவர்களுக்கான விசேட கூட்டம் கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் ஆலய பிரதான மண்டபத்தில் நேற்று(22) இடம்பெற்றது.

இக்கூட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் கலந்து கொண்டிருந்தார். அத்தோடு கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது ஜீவன் தொண்டமான் கருத்து தெரிவிக்கையில்,
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு வழங்கியதை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. ஆனால் வர்த்தமானியில் இதற்கான அறிவித்தலை வழங்க வேண்டும். பெருந்தோட்ட பகுதியில் முன்னெடுக்கப்படும் வீடமைப்பு திட்டம் தற்போதைய நிலைமை, அரசாங்கம் எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றது. அது எந்த அளவுக்கு மக்களுக்கு சாத்தியமாக இருக்கின்றது.

தற்போது சம்பளம் அதிகரிக்கப்பட்ட பின்னர் கெடுபிடிகள் அதிகரித்துள்ளது. தோட்டத் தொழிலாளர்களுக்கான எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் இதன் போதும் விளக்கம் அளித்தார்.

இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ், பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள், நகர வர்த்தகர்கள் கட்சியின் பிரதானிகள் என பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

42 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

65 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

52 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்.!

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில், இலங்கை…

53 0 0